உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயன்பாடில்லாத கோவில் நிலங்களில் மரக்கன்று நட அறநிலையதுறை உத்தரவு

பயன்பாடில்லாத கோவில் நிலங்களில் மரக்கன்று நட அறநிலையதுறை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், அனைத்து இணை, துணை, உதவி கமிஷனர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்ததை நிறைவேற்ற, ஒவ்வொரு இணை கமிஷனரும், தங்கள் மண்டலத்தில், தலா ஒரு லட்சம் நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடுவதற்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம், மரங்கள் வளரக்கூடிய, நீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். தோட்டக்கலை அல்லது மரங்களை நடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆலோசகராக நியமித்து, மரக்கன்று நடும் பணியை செய்யவேண்டும்.சமூக ஆர்வலர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழியே, அவற்றை மூன்று ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். பராமரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றால், மரக்கன்றுகளை நன்கொடையாளர்கள் வழியே பெற்று, கோவில் சார்பில் அவற்றை நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mohan
மே 19, 2025 10:28

ஓ அப்டி போகுதா கதை ..பூரா இடத்துலயும் செம்மரம், சந்தன மரம் மற்றும் விலை உயர்ந்த மரங்களை வைத்தால் நம்ம வட்டம் மாவட்டம் அப்பப்போ அதை கள்ள தனமா வெட்டி அது மூலமா காசு பாத்ரலாம் சபாஷ்


Mecca Shivan
மே 19, 2025 10:22

ஒரு மரக்கன்றுக்கு ஒருவருடத்திற்கு 1000 ருபாய் என்று வைத்துக்கொண்டால் கூட எப்படியும் ஐந்துலட்சம் மரக்கன்றுகள் கணக்கில் வரக்கூடும் ..பலே


மீனவ நண்பன்
மே 19, 2025 04:07

சில வருடங்களுக்கு முன் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு 70 லட்சம் மரக்கன்றுகள் நட்டதாக பெருமையாக பேசினார்கள் ..தற்போதய நிலவரம் தெரிந்தால் சொல்லவும்


Kasimani Baskaran
மே 19, 2025 03:57

அறநிலையத்துறை கோவில் குத்தகைதாரர் அல்லர். கோவில் நிர்வாகத்தில் அரசால் லீலைகள் புரிய முடியாது. அறங்காவலர்கள் குழு மட்டுமே நிர்வகிக்க முடியும். இந்த அப்பட்டமான விதி மீறலை இந்துக்கள் எளிதாக எடுத்துக்கொள்வது தேவையற்றது. உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருந்தால் இது போல அடிப்படை விதி மீறல்கள் தாராளமாக நடக்கும் - கடைசியில் இந்துக்கலாச்சாரம் அழிக்கப்படும். திராவிட கலாச்சாரம் மட்டுமே மிஞ்சும். கலாச்சாரம் காக்க அரசாங்கத்தை கோவில்களை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 07:58

இந்த மரம் நடுவதே மாற்று மதத்தவர்களுக்கு எவ்வளவு நிலம் இந்து கோயில்களுக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தி வக்ஃப் போர்டு மூலமாக ஆட்டையை போடுவதற்கு தான். இதை எந்த இந்துவும் புரிந்து கொள்ள மாட்டேன். இவனே வலியச்சென்று மரங்களை நட்டு காட்டி கொடுப்பார்கள். நமது மதச்சார்பின்மை கொள்கை படி எல்லா இந்துக்களும் மற்ற மதத்தவரை அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால் மற்ற மதத்தவர் எவரும் இந்துக்களை அரவணைத்து செல்ல கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை