மேலும் செய்திகள்
குட்டியுடன் உலா வரும் யானை: தொழிலாளர்கள் அச்சம்
30-Oct-2026
கூடலுார்: பள்ளத்தில் சிக்கித் தவித்த குட்டி யானையை, வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்த்தனர். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், வழிகடவு அருகே அலக்கல் என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், நேற்று (நவ.,27) இரவு, காட்டு யானைகள் சப்தம் கேட்டது. கிராம மக்கள் சென்று பார்த்த போது, குட்டி யானை ஒன்று பள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. அதன் தாய் உட்பட காட்டு யானைகள் அதை மீட்க போராடின. சம்பவம் குறித்து வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வழிக்கடவு வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று காட்டு யானைகளை விரட்டி, பல மணி நேரம் போராடி, குட்டி யானையை மீட்டு, யானை கூட்டத்தில் சேர்த்தனர். கூட்டத்திலிருந்த தாய் யானை, குட்டியை அரவணைத்து சென்றது. வன ஊழியர்கள் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
30-Oct-2026