உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் கலக்கல்

தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் கலக்கல்

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.ஸ்ரீ ராமரின் அவதார தினமான ராமநவமியான நேற்று, பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் இறங்கியதும், அங்கிருந்த தனி அறைக்கு சென்று தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து கலக்கலாக காரில் ஏறி, பாம்பன் வந்து புதிய பாலம், ரயில் போக்குவரத்தை துவக்கினார்.பின், ராமேஸ்வரம் கோவில் கிழக்கு வாசலில் வேட்டி, வெள்ளை சட்டையுடன் பிரதமர் மோடி இறங்கியதும், அங்கு கூடியிருந்த ஏராளமானோர் உற்சாகத்தில், 'மோடி ஜி... மோடி ஜி... பாரத் மாதா கீ ஜெய்' என, கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

3வது முறை

 ↓ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி 2017 ஜூலை 27ல் திறந்து வைத்தார் ↓அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக விரதம் இருந்த பிரதமர் மோடி, 2024 ஜன., 20ல் ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து புனித தீர்த்தம் எடுத்துச் சென்றார் ↓மூன்றாவது முறையாக நேற்று ராமேஸ்வரம் வந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஏப் 07, 2025 10:16

பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். என்று கேட்கும்போது ஒரு நாட்டின் பிரதமருக்கு தமிழர்களின் மீது இருக்கும் அக்கறை இங்கே இல்லையே என்றுதான் வருத்தமாக உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை