உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விலை உயர்வை கண்டித்து ம.ஜ.த., போஸ்டர் வெளியீடு

விலை உயர்வை கண்டித்து ம.ஜ.த., போஸ்டர் வெளியீடு

பெங்களூரு: விலைவாசி உயர்வு, மாநில அரசின் நிர்வாக தோல்வி, ஊழல் ஆகியவற்றை கண்டித்து, ம.ஜ.த., போஸ்டர் வெளியிட்டுள்ளது. 'போதுமப்பா போதும், காங்கிரஸ் அரசு போதும்' என்ற போஸ்டர் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.இதுகுறித்து, ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:மாநில அரசுக்கு எதிரான எங்களின் போராட்டம், ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துடன் நின்றுவிடாது. நிரந்தரமாக நடக்கும். மாநில அரசு சொந்த கட்சியின் அமைச்சர்களை ஹனிடிராப் செய்கிறது. கட்சி மேலிடத்துக்காக நிதி சேகரிக்கிறது. மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வைத்துள்ளது.விலை உயர்வு, மாநில அரசின் நிர்வாக தோல்வி, ஊழலை கண்டித்து, ம.ஜ.த., போஸ்டர் வெளியிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இந்த போஸ்டர் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எந்தெந்த சந்தர்ப்பத்தில், எப்படி பேசினர் என்பதை வெளியிட்டுள்ளோம்.கர்நாடக அரசு ஊழலில் 'நம்பர் 1' என்பதை, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு வாக்குறுதித் திட்டங்களால், மாநிலத்தின் மேம்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என, கூறினார்.விலை உயர்வு மற்றும் ஆட்சி தோல்வியை கண்டித்து, ஏப்ரல் 12ம் தேதியன்று ம.ஜ.த., சார்பில் மத்திய அமைச்சர் குமாரசாமி தலைமையில், பெங்களூரின் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடக்கவுள்ளது. இதில் இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்பர்.வாக்குறுதித் திட்டங்களின் பலன், அந்தந்த மாதங்களில் பயனாளிகளுக்கு கிடைக்கும் என, காங்கிரஸ் அரசு நம்பிக்கை அளித்திருந்தது. அதன்படி நடந்து கொண்டதா? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உதவித்தொகையை வழங்குகிறார்.காங்கிரஸ் அரசு இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் மட்டும், ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, கிரஹ லட்சுமி உதவித்தொகையை, பயனாளிகளின் கணக்கில் செலுத்தியது.மாநிலத்தில் பிறப்பு சான்றிதழ் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், மெட்ரோ கட்டணம் என, அனைத்தும் உயர்ந்துள்ளது. மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கு மட்டும் இன்னும் வரி விதிக்கவில்லை. மக்களின் வாழ்க்கை தரம் உயரும், மாநிலம் மேம்பாடு அடையும் என, காங்கிரஸ் அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை.வரும் நாட்களில் மாநிலம், பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாநில அரசு 2.25 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இவ்வளவு கடனும், மாநில மேம்பாட்டுக்காக வாங்கப்பட்டதா?மக்களின் உணர்வை மதித்து, விலை உயர்வை கண்டித்து ம.ஜ.த., போராட்டம் நடத்துகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, சமையல் காஸ் சிலிண்டர் விலை 1,241 ரூபாயாக இருந்தது. இப்போது 854 ரூபாயாக உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி