உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு

பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சேலம் மேற்கு பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கட்சியின் கட்டுப்பட்டை மீறியதாகக் கூறி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார்.இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ம.க., கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ம.க., தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f2sqbp2w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை. பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்.எல்.ஏ., அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்.எல்.ஏ., அருளுடன் பா.ம.க.,வினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anand
ஜூலை 02, 2025 15:30

இவர்களாவது பரவாயில்லை, சில அப்பன் மவன்கள் இடையே நடக்கும் சண்டைகள் பால்டேன் குடிக்கும் அளவுக்கு கூட சென்றுள்ளது...


Suresh Velan
ஜூலை 02, 2025 15:04

என்ன இந்த செய்தி அரை குறையா இருக்கே , அதுக்கப்புறம் ராமதாஸ் இதை பற்றி என்ன சொன்னார் , அவரும் இந்த முடிவுக்கு சம்மதித்தாரா ? அல்லது அவர் நீக்கப்பட்டது தவறு , கட்சியில்தான் இந்த உருப்படாத அருள் இருக்கிறார் போன்ற செய்தியை காணோமே , உருப்படாத தமிழக மக்களுக்கு இப்படி பட்ட உருப்படாத செய்தி வேண்டியது தான்


கல்யாணராமன்
ஜூலை 02, 2025 13:17

பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்ற முறையில் சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பவும்.


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 14:13

இந்த மேங்கோ பாய்ஸ்களோட அலப்பறை நாளுக்கு நாள் எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது எங்க போய் முடியுமோ தெரியல..


vijay
ஜூலை 02, 2025 13:05

ஒங்க அக்கப்போர் தாங்க முடியலப்பா


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 02, 2025 13:01

சமீப ராஜ்ய சபை தேர்தலில் போட்டி இருந்திருக்க வேண்டும் ....அமித்திமுக ரெண்டாவது இடத்துக்கு ஆப்பு ரொம்போ சுலபமா வெச்சிருக்கலாம் போல


VSMani
ஜூலை 02, 2025 12:44

ராமதாஸ் க்கு இந்தவிசயம் தெரியுமா? கட்சியிலிருந்து MLA யை நீக்கினால் MLA பதவி போகுமா?


RRR
ஜூலை 02, 2025 12:44

அடுத்ததாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பார்... அடப்போங்கய்யா நீங்களும் உங்க குடும்பக்கட்சியும்...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 02, 2025 14:28

அடுத்ததாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பார், ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவிப்பார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை