| ADDED : ஆக 26, 2026 03:29 AM
சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல், பலத்தக் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.