உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மேற்கு மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 மேற்கு மாவட்டங்களில் இன்று மிதமான மழை

சென்னை: 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், குமரிக்கடல் வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் , நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மார்ச், 20 வரை, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி