உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மோடி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்

 மோடி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்

மத்திய பட்ஜெட்டில், 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால், 7 சதவீத வளர்ச்சியை நெருங்கி விடுவோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மத்திய பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தேர்தல் குழு அமைத்த மூன்று மணி நேரத்திற்குள் ம.தி.மு.க.,வின் தேர்தல் குழு அமைக்கப்படும். பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அந்தஸ்து வேண்டும் என, நேரு காலத்திலிருந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மோடி ஆட்சிக்கு வந்த பின்தான், இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் இந்தியா குரல் கொடுக்கவில்லை. மோடிக்கு நாட்டில் நல்ல பெயரே இல்லை. ஆனால், ஏதேதோ ஏற்பாடுகளை செய்து, நல்ல பெயர் வாங்கி விடுகிறார். -வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajarajan
பிப் 09, 2026 09:55

ஆமா, கும்மிடிப்பூண்டி தாண்டினா, மோடியை யாரும் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. காரணம், அவர் ஆரம்பத்திலிருந்தே ஒரே கட்சியில் இருக்கிறார். பச்சோந்தி போல, கூடுவிட்டு கூடு கட்சி மாறவில்லை. பதவிக்காக விலை போகவில்லை. வாரிசு அரசியல் இல்லை. எப்போதும் நாடு நாடு என்றே பேசுகிறார். நீங்கள் அப்படியா? மேல சொன்ன எல்லாவற்றிக்கும் எதிர்பதம் தான். சுயநலம், அடிமைத்தனம், வாரிசு அரசியல், பிரிவினை இப்படித்தானே உங்க அரசியல் போகுது.


sankar
பிப் 04, 2026 17:03

மானமிழந்தும் ஒரு மனிதன் வாழ முடியும் என்பதற்கு மகத்தான உதாரணம்


KRISHNAN R
பிப் 04, 2026 12:39

நல்லது செய்ய வேண்டும்


ramani
பிப் 04, 2026 08:30

மோடிஜி மக்களுக்கு நல்லது செய்கிறார். நல்ல பெயர் எடுக்கிறார். உங்க எல்லாருக்கும் வக்கு இல்லை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தரும் நிதியை சுருட்ட தான் தெரிகிறது


sundararajan
பிப் 04, 2026 00:19

உம்முடைய உளறல் சீமானை விடப் பெரிதாக உள்ளதே


K V Ramadoss
பிப் 03, 2026 14:14

வரிந்து கட்டி பங்கு கேட்க ஏது வக்கு ?