உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிக்கு ஐந்தாண்டு சிறை; மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

பயங்கரவாதிக்கு ஐந்தாண்டு சிறை; மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை; பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் பயங்கரவாதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evmrfw95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை செல்ல இருந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடை பாலத்திற்கு கீழ், பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்து, அத்வானியை கொல்ல முயன்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது ஹனிபா என்ற தென்காசி ஹனிபா திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பதுங்கி இருந்தார். அவரை 2013ல் சிறப்பு விசாரணை குழு டி .எஸ். பி. கைது செய்ய முயற்சித்தார். டி .எஸ். பி., ஐ கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக முகமது ஹனிபா மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். இதிலிருந்து அவரை திண்டுக்கல் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விடுதலை செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்தது. தண்டனை குறித்து கேள்வி எழுப்ப முகமது ஹனிபாவை ஆஜராக உத்தரவிட்டது உயர்நீதிமன்றக்கிளை. அதன்படி அவர் இன்று கோர்ட்டில் ஆஜராக, முகமது ஹனிபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rathna
அக் 28, 2025 16:53

காவல் அதிகாரியை தாக்கிய தீவிரவாத நபருக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே மர்ம நபர்களின் அநியாய செயல்களை தடுக்க முடியும்.


திகழ் ஓவியன்
அக் 28, 2025 16:47

படு பாதக செயலுக்கு, படுபயங்கரமான தண்டனைதான் போங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை