உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இன்று இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் மோகன் பகவத்

சென்னையில் இன்று இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் மோகன் பகவத்

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், நான்கு நாள் தமிழக பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார்.ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல் வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையா டல் நிகழ்ச்சிகளில், மோகன் பகவத் பங்கேற்றார். வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிக ளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவான்மி யூசில் உள்ள ராமச்சந் திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இளைஞர்கள் கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சியில் பங் கேற்க 1,500 இளை ஞர்கள் பதிவு செய் துள்ளதாக ஆர்.எஸ். எஸ்., தெரிவித்துள்ளது. சென்னை சேத்துப் பட்டு, ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைமை அலுவ லகத்தில் தங்கும் அவர், அமைப்பு ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். நாளை திருச்சி செல்லும் அவர், அங்கு ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளை முடித்து, வரும் 11ம் தேதி கொல்கட்டா செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜெகதீசன்
டிச 09, 2025 13:00

மற்ற மாநிலங்களில் பேசியது போல தமிழகத்துல அவர் பேசக்கூடாது. இங்குள்ள அனைத்து பிரிவு இந்துக்களையும் "இந்து" எனும் பரந்த பொருள் கொண்டு ஏற்பதாக இருக்கனும்.


Rathna
டிச 09, 2025 17:01

அனைத்து சமூகத்தினரும் அங்கே உள்ளனர்.


Rathna
டிச 09, 2025 12:32

நல்ல ஆரம்பம். இந்த கால இளைஞர்களுக்கு மிக மிக தேவை. முத்துராமலிங்க தேவர் சொல்லியது போல தேசியமும், தெய்வீகமும் தான் வாழ்க்கை.


vbs manian
டிச 09, 2025 08:37

ஐயா கவனம் தேவை. இங்கு நிறைய பேர் உங்களை காய்ச்சி ஊற்றுவார்கள். நீங்கள் பேசுவதை மடை மாற்றம் செய்து விடுவார்கள். இங்கு பிரிவினை பேச்சுக்களே விலை போகும்.


தலைவன்
டிச 09, 2025 10:03

இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


V RAMASWAMY
டிச 09, 2025 08:31

வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. பாராட்டுக்கள்.


Raja
டிச 09, 2025 12:09

We need religious directions and beliefs to organise our lives in the current hectic life These sort of true awareness gatherings are very important for the younger generations


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை