உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருப்ப மனு என்ற பெயரில் பண மோசடி: அன்புமணி மீது டி.ஜி.பி.,யிடம் புகார்

விருப்ப மனு என்ற பெயரில் பண மோசடி: அன்புமணி மீது டி.ஜி.பி.,யிடம் புகார்

'பா.ம.க., விருப்ப மனு' என்ற பெயரில் பண மோசடி செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி மீது, டி.ஜி.பி., அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக ராமதாஸ் புகார் அளித்துள்ளார். இது குறித்து, ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருள் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: பா.ம.க., பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என, மின்னஞ்சல் வாயிலாக தமிழக டி.ஜி.பி.,க்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்; அதேபோல, தேர்தல் கமிஷனிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் மனு கொடுத்தும், 10,000 ரூபாய் கொடுத்தும் ஏமாற வேண்டாம். கட்சித் தலைவர் என சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. ஆனால், தேர்தல் கமிஷனை ஏமாற்றியது போல நீதிமன்றத்தையும் ஏமாற்றுகின்றனர். உண்மையான பா.ம.க., என்பது ராமதாஸ் தலைமையில் இருப்பது தான்; அவர் தான் கட்சியை உருவாக்கினார். அவர் தான் கட்சியின் நிறுவனர். அவர் தான் கூட்டணியை முடிவு செய்வார்; வெற்றி கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
டிச 15, 2025 19:23

பண மோசடி என்றால்.... பணம் கட்டி ஏமாந்தவர்கள் தானே ஏமாற்றி விட்டார் என்று புகார் கொடுக்க வேண்டும்..... ஆனால் இங்கே அவரது அப்பா எதற்க்கு முன்கூட்டியே புகார் மனு கொடுகிறார் ??


Kovandakurichy Govindaraj
டிச 15, 2025 10:21

அது ரவிச்சந்திரன் நடித்த படம்


vbs manian
டிச 15, 2025 09:25

வோட்டு பற்றி கவலைபடாமல் துணிவோடு பல பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். தமிழகம் இவரை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை.


ராஜா
டிச 15, 2025 07:30

ஜெய்சங்கர் படம் அதே கண்கள் படம் ஞாபகம் இருக்கா


vaiko
டிச 15, 2025 04:43

சௌமியாவையும் சேர்த்து உள்ளே போடுங்கள் எஜமான்


Kasimani Baskaran
டிச 15, 2025 03:52

திமுகாவை போல முன்பணம் வாங்கிக்கொண்டு தொகுதிகளை விற்பது என்பது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. பணம் கொடுத்தவன் அதை எடுக்க ஊழல் செய்வது வர்த்தகம் போல ஆகிவிடும். இது போன்ற காட்சிகளை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது.


புதிய வீடியோ