உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவமழை முன்னெச்சரிக்கை : பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

பருவமழை முன்னெச்சரிக்கை : பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வழக்கத்தை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கி இருந்தாலும், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு தற்போது 700 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் திறக்கப்படும் உபரிநீர் தாமரைப்பாக்கம் அணையில் தேக்க வைத்து சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட்ட உள்ளது. அதேபோல, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, தற்போது 3,006 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கால்வாய் ஓரம் வசிப்பவர்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் ஓரம் வசிக்கும மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jayaraman Ramaswamy
அக் 15, 2025 18:17

நல்லார் ஓருவர் உளரேல் பெய்யென பெய்யும் மழை. இந்த கூற்றில் உளரேல் என்பதின் தற்போதைய அர்த்தம் உளறுபவர். தமிழகத்தில் உளறுபவர் அதிகம் பேர் உள்ளதால் மழை பெருகி, மக்களை அழிக்க வெள்ளம் பெருகுகிறது.


Vasan
அக் 15, 2025 17:53

இது சரித்திரம். பருவ மழை ஆரம்பிக்கும் முன்னதாகவே நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் செங்கோல் ஆட்சியை பறைசொல்ல வேறொன்றும் தேவையில்லை, தேவையில்லை, தேவையில்லை.


sengalipuram
அக் 15, 2025 15:56

தமிழ் நாடு சராசரியாக வருடத்திற்கு 10 -12 TMC வரை தண்ணீர் கடலில் உபரி நீராய் விடுகிறது . உபரி நீரை தேக்கி வைக்க எந்த முயற்சியும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை