உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும்: நேரு

சென்னை: ''கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காவிட்டால், கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும். எனவே, அறிவித்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது,'' என, அமைச்சர் நேரு கூறினார்.தஞ்சாவூர் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில், கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, ம.ம.க., - எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது நடந்த விவாதம்:

ஜவாஹிருல்லாஹ்: அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வீரமாங்குடி ஊராட்சியில், 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. அங்கு அறிவியல் ரீதியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த இடத்திற்கு அருகே கொள்ளிடம் கரை உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், நீர் மாசுபடும். எனவே, தகுந்த இடம் கிடைக்கும் வரை, திட்டத்தை கிடப்பில் போட வேண்டும்.அமைச்சர் நேரு: அய்யம்பேட்டை பேரூராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போதுமான இடசவதி இல்லை. அருகில் உள்ள வீரமாங்குடி ஊராட்சியில், இரண்டு ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது.இந்த நிலம், பேரூராட்சிக்கு ஒப்பபடைப்பு செய்யப்படவில்லை. நிலம் ஒப்படைப்பு செய்யும்பட்சத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று, விஞ்சான ரீதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.தமிழகம் முழுதும், 10 பேரூராட்சிகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 50 பேரூராட்சிகளில் பணிகள் நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி, 20 பேரூராட்சிகளில் பணிகள் துவங்கவுள்ளன.சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை என, கிடப்பில் போட்டு விட்டால், கொள்ளிடத்திற்குதான் கழிவுநீர் வந்து சேரும், கொசு தொல்லை அதிகரிக்கும்; சாலையில் சாக்கடை ஓடும். எனவே, அறிவித்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மார் 27, 2025 11:14

தீவீரவாதிகள் குடும்பங்களுக்கு அன்னிய நிதி திரட்டி தண்டனை பெற்றவர் சாக்கடை நீர் சுத்திகரிப்பு திட்டம் பற்றிக் கேள்வி கேட்கிறார்.


அப்பாவி
மார் 27, 2025 10:42

இன்னிக்கிதான் தெரிஞ்சுதாக்கும்? நாலு வருஷமா கொசு கடிக்கலியா?


sankaranarayanan
மார் 27, 2025 08:38

அமைச்சர் சாக்கடைகளை கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது அந்த சாக்கடைகளில் தண்ணீர் சரளமாக ஓடுகிறதா என்றும் அவைகள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்றும் கவனிக்க வேண்டும் இப்போது ஒரு சாக்கடையிலாவது தண்ணீர் ஓடுவது இல்லை இத்தனைநாள் முன்பைவிட அதிகமாகவே தேங்கிய தண்ணீரினால் கொசுக்கள் அதிகமாகி விடுகின்றன


Ramesh Sargam
மார் 27, 2025 08:32

கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் அமைக்காவிட்டால் நாங்கள் எப்படி கொள்ளையடிக்க முடியும்?


Appa V
மார் 27, 2025 07:09

ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன ஆனால் சீவேஜ் குழாய்கள் பழைய நிலைமையிலேயே குறைந்த கெபாசிட்டியில் கழிவுகளை வெளியேற்ற அவஸ்தை படுகின்றன சாலையில் இருக்கும் மேன் ஹோல் வழியாக கொப்பளம் கொப்பளமா சாலையில் வழிந்து ஓடுகின்றன ..காலையில் நடக்கும்போது பரத நாட்டியம் ஆடுவது போல நடக்க வேண்டி இருக்கிறது இந்த கழிவுகளை தாண்டி செல்வதற்கு ..இந்த நிலைமை விருகம்பாக்கம் சாலைகளிலும் ….


வாய்மையே வெல்லும்
மார் 27, 2025 06:24

இன்னும் கழிவுநீர் மனித கழிவு சவுக்கு வீட்டில் கொட்டி ஆர்பாட்டம் இன்னும் முடியல .. அதுக்குள்ள கொசுத்தொல்லை சாக்கடை அதே சப்ஜெக்ட் . எனக்கென்னவோ ஏழரை பன்னி மூலமாக ட்ராவிடிய ஸ்டாக்ஸ் கடுமையாக தாக்கும் என தோணுது.. பன்னி என கேட்பவர்களுக்கு சவுக்கு வீட்டுல போயிட்டு பாருங்க புரியும்


raja
மார் 27, 2025 06:09

கழிவு நீரில் புறங்கை நக்களாமுண்ணு பார்த்தா.. இவன் யாரடா ..