உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்குவாரி நீரில் மூழ்கி இரு மகள்களுடன் தாய் பலி; பல்லடம் அருகே பரிதாபம்

கல்குவாரி நீரில் மூழ்கி இரு மகள்களுடன் தாய் பலி; பல்லடம் அருகே பரிதாபம்

பல்லடம்: திருப்பூர் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் அருகே உள்ள வேலம்பாளையத்தில் செயல்படாத கல்குவாரி ஒன்று இருந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு மகள்களுடன், அந்த கல்குவாரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பல்லடம் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை