உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி

அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணியின் வீட்டிற்கு, அவரது தாய் சரஸ்வதி நேற்று வந்தார்.பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை, பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு, நேற்று மதியம் சரஸ்வதி வந்தார். அவரிடம் அன்புமணி, அவரது மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் ஆசி பெற்றனர். பின் தைலாபுரம் புறப்பட்டுச் சென்றார்.சமீபத்தில் தைலாபுரம் சென்ற அன்புமணி, தாயை சந்தித்து தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, மகன் வீட்டிற்கு தாய் வந்து சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை