திரு மாவளவனா... இரு நாவளவனா?
அனைத்து கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காங்கிரஸோடு கைகோர்க்குமாறு, நடிகர் விஜய்க்கு, தன் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக தொடர்ந்து அறிவுரை சொல்வது ஏன்? ஒருபுறம் தி.மு.க., - காங்., கூட்டணி; மறுபுறம் காங்., - த.வெ.க., கூட்டணி என 'சீட்' பேரத்திற்காக, திருமாவளவனாக இருந்தவர், இரு நாவளவனாக, நடிகர் கமலையும் மிஞ்சும் விதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். த.வெ.க.,வை ஆரம்பித்ததும், ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து கொண்ட விஜய், ஐந்தாண்டுகளுக்கு சினிமாவில் நடிக்காமல் தியாகம் செய்ததற்கு, இரு மடங்கு இழப்பீடு பெற்று, கட்சியை லாட்டரி பணத்தில் கரைத்தது தான் மிச்சம். கட்சியையும் தொண்டர்களையும் அடகு வைத்த விஜயின் உண்மை வரலாறு வெளிச்சத்துக்கு வரும். த.வெ.க., விளம்பரப் பிரிவு செயலர் போல செயல்படும் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு, மக்களிடம் பல்லிளிக்கப் போகிறது. - பிரசாத் செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,