உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: கவர்னர் ஒப்புதல் தரவில்லை

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: கவர்னர் ஒப்புதல் தரவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு கவர்னர் இதுவரை அனுமதிதரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.மேலும் அவர் தொடர்புடைய சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்புதல் கோரி கவர்னர் ரவிக்கு கடந்த ஆண்டு மே 15ம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இது அவரின் பரிசீலனையில் உள்ளது.இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார். அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசுதரப்பிடம் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கம்: சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க , கவர்னரின் ஒப்புதலை கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை துவங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

G Mahalingam
ஆக 30, 2024 19:02

திமுக அதிமுக கள்ள உறவு. விஜய் அண்ணாமலை சீமானை எதிர்க்க திமுக அதிமுக கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. அதிமுக தலைவர்களுக்கு கோடி கோடியாய் கொடுத்து கார்போனேட் கம்பெனியை விலைக்கு வாங்குவுவது போல அதிமுகவை விலைக்கு வாங்கினாலும் வாங்கி விடுவார்கள்.


Easwar Kamal
ஆக 30, 2024 18:25

இன்னமும் இந்த admk எதுக்கு இந்த வீனா போன governer குடை பிடிக்கிறார். அதிமுக கரனுங்கதான் பிஜேபிஉடன் ஓட்டும் கிடையாது உறவும் கிடையதுனு சொல்லிடணுவவாளே. மத்தியில் இந்த கட்சிகு ஒரு சீட்டும் கிடையாது பிறகு எதுக்கு இந்த பாசம்.


ஆரூர் ரங்
ஆக 30, 2024 18:22

வழக்குக்கு அனுமதி தந்தாலும் கட்சி மாறி பொன்முடி மாதிரி தப்பித்து விடமுடியும். தி.மு.க அரசு அப்பீல் செய்யாது. அப்படியிருக்கையில் வழக்கை வாபஸ் பெற வைத்தால் மக்களது வரிப்பணமாவது மிச்சப்படும்.


MADHAVAN
ஆக 30, 2024 17:27

ஆளுநருக்கு நேர்மையாய் நடக்கத்தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்


Palanisamy Sekar
ஆக 30, 2024 16:25

ஆளுநர் என்ன நினைக்கின்றார் என்றால்.. விஜயபாஸ்கர் மீது தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினோ திமுகவோ அதிக அளவுக்கு அரசியல் தாக்குதல் மேலெடுக்கவில்லை. ஆனால் அதே சமயம் கொடநாடு கொலை வழக்கை மூன்றே மாதங்களில் விசாரித்து எடப்பாடியை சிறையில் உள்ளே தள்ளுவேன் என்று சபதம் போட்டவர் ஏன் கொடநாடு வழக்கை தூக்கி மூலையில் போட்டார் என்று எண்ணியதால், விஜயபாஸ்கர் மீதான வழக்கிருக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. நியாயம் தானே... மிகப்பெரிய மர்மம் நிறைந்த கொலைவழக்கை இன்னும் விசாரிக்காமல் தேமேன்னு இருக்கும் இதே திமுக அரசு ஏன் விஜயபாஸ்கர் மீதுமட்டும் நடவடிக்கையை மேற்கொள்கின்றது? இது ஊரறிந்த ரகசியமே என்றாலும் எடப்பாடியுடன் உள்ள கள்ளத்தொடர்புதான் காரணம் என்கிறது அரசியல் மேகம். ஆளுநரின் அரசியலை புரிந்துகொள்ள திமுகவில் யாருக்கும் அந்த அளவுக்கு ஞானம் கிடையாது என்பதுதான் நிஜம்


Kadaparai Mani
ஆக 30, 2024 18:12

ஆருத்திரா வழக்கு விசாரணை ஏன் cbcid வசம் ஓப்படைக்க வில்லை . மயிலாப்பூர் fund வழக்கு நியாயம் கிடைக்குமா .திமுக அரசு மெத்தனம் கண்டிக்க தக்கது