உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு; விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு; விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரம் இருவேல்பட்டு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர். மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asaugryu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (டிச.,03) புயல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும், அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர், வனத்துறை அமைச்சருடன் விழுப்புரம் சென்றார். இருவேல்பட்டு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொன்முடி வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து இருந்தார். உடனே காரில் பொன்முடி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 91 )

Natarajan Ramanathan
டிச 07, 2024 18:29

வீசியது பெரியார் மண்தானே?


Matt P
டிச 06, 2024 10:17

பொதுப்பணிக்கு கறையை ஏற்படுத்தியவர். அதன் அடையாளமாக சட்டையிலும் கறை ..


Mariadoss E
டிச 05, 2024 20:32

இவங்க என்ன சொல்ல வராங்க...மந்திரி வந்தா சேத்த அள்ளி வீசுறாங்க. வரலன்னா குறை சொல்றாங்க....


visu
டிச 10, 2024 15:31

அப்ப இன்னமும் அதுவே புரியலையா முதலில் தேவை அனைவருக்கும் தங்குமிடம் உணவு உடைகள் இதெல்லாம் கொடுக்கும அமைச்சர் வந்து வீடியோ மட்டும் எடுத்து கொண்டு போனால் மக்கள் செய்வாங்க செய்வாங்க


kumarkv
டிச 04, 2024 22:35

இவருக்கு சேறே அதிகம்.


Ramalingam Shanmugam
டிச 04, 2024 13:49

இது போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா இன்று நீ நாளை யார் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்


nadir
டிச 04, 2024 09:40

Stage managed


AMLA ASOKAN
டிச 04, 2024 09:06

எந்த மாநில ஆட்சியிலும் உள்ள அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றால் தான் நிவாரணம் துரிதமாக வழங்க முடியும். சேற்றை வாரி இறைப்பதால் யாருக்கு பாதிப்பு? அமைச்சர் காரில் சென்றுவிட்டார். இன்று வெறுப்பை காட்டும் அதே மக்கள் நாளைக்கு அவருக்குத்தான் வாக்கும் அளிப்பார்கள். விமர்சகர்கள் மக்களை முட்டாள்கள், திமுக பிரியாணிக்கும், பாட்டிலிக்கும், பணத்துக்கும் வோட்டு போடுவார்கள் என கூப்பாடுதான் போட முடியும் . மக்கள் நல்லாட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் .


பேசும் தமிழன்
டிச 04, 2024 08:00

என்னது ....மக்களுக்கு ரோசம் வந்து விட்டதா ...அவர்கள் உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்களா .....இவர்கள் எப்பசியும் நாம் தான் வெற்றிப்பெற போகிறோம் என்று இறுமாப்பில் இருக்கிறார்கள் ....நம்மிடம் பலமான கூட்டணி இருக்கிறது என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள்....மக்கள் நினைத்தால் ....எல்லோருக்கும் தேர்தலில் ஆப்பு தான்.


ராமகிருஷ்ணன்
டிச 04, 2024 06:28

வழக்கமாக செருப்பு தானே வீசுவாங்க.


sankaran
டிச 03, 2024 21:24

நான் அடித்து சொல்கிறேன் ...2026 சட்ட சபை தேர்தலிலும் தீயமுக தான் வெற்றி பெறும் .. ஒரு பொட்டலம் சிக்கன் பிரியாணி , ஒரு குவாட்டர் விஸ்கி பாட்டில் , ரூ . 200 ...எல்லாம் கஷ்டங்களும் மறந்து போய் விடும் ...


புதிய வீடியோ