உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, இசையமைப்பாளர் தேவா உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த, பழைய மாங்காடைச் சேர்ந்தவர் இசையமைப்பாளர் தேவா, 75. இவர், நேற்று முன்தினம் சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று மதியம் 3:00 மணி அளவில் தேவாவின் உடல், சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, சக்கரமல்லுார் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின், தேக்கு பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், ராணிப்பேட்டை கலெக்டர் பிரியா, போலீஸ் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர், அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ஆயுதப்படை போலீசார், 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பாரம்பரிய முறைப்படி தேவா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், திரைப்பட இயக்குநர்கள் சேரன், மோகன் ராஜா, பின்னணி பாடகி அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை