உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் கவுன்சிலர் அழைப்பு

கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் கவுன்சிலர் அழைப்பு

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில், கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை, தி.மு.க.,வைச் சேர்ந்த முஸ்லிம் கவுன்சிலர், தலைவர் மற்றும் சக கவுன்சிலர்களிடம் வழங்கி, அழைப்பு விடுத்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி கூட்டம், நேற்று தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் சுமிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதி ல், 12வது வார்டு தி.மு.க.,வைச் சேர்ந்த மு ஸ்லிம் கவுன்சிலர் சாஹிராபானு, தலைவர் உள்ளிட்ட அனைவரது இருக்கைக்கு நேரில் சென்று, தன் வார்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் செப்., 4ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை கொடுத்து, 'கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார். முஸ்லிம் பெண் கவுன்சிலர், விநாயகர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கியது, மத நல்லிணக்கத்தை பேணுவதாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V RAMASWAMY
ஆக 08, 2025 08:52

என்னதான் நெருங்கி பழகி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினாலும், அவர்கள் உணர்வே வேறு.


Sundaran
ஆக 08, 2025 07:42

எப்படி எல்லாம் மக்களை மூளை சலவை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் நல்லவன் போல நடித்து மதம் மாற செய்து விடுவார்கள் விடுவான்கள் ஹிந்துக்களே விழிப்புடன் இருங்கள். இன்று பத்திரிகை கொடுப்பான் நாளை பள்ளி வாசல் வழியாக சாமீ ஊர்வலம் செல்லக்கூடாது என்பான் .ஏமாறாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை