உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்பிக்கைக்கு நாங்க தடையில்லை : முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி முதல்வர் பேச்சு

நம்பிக்கைக்கு நாங்க தடையில்லை : முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி முதல்வர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை' என அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார். பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க., வழங்கி வருகிறது. ஏழு முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்மிக சுற்றுலா

அறுபடை வீடுகளில் ரூ 689 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 69 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அறுபடை ஆன்மிக சுற்றுலா பயணத்திற்கு 713 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எல்லா கோவில்களிலும் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முருகன் கோவில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

கோவில் வளர்ச்சி

திடீரென்று பழநியில் மாநாடு நடத்தவில்லை. பல்வேறு பணிகள் செய்த பிறகு தான் மாநாடு நடத்தப்படுகிறது. திருக்கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் அரசு. கோவில் வளர்ச்சிக்கும் அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் தி.மு.க., அரசு பணியாற்றி வருகிறது.

ரூ. 5,570 கோடி நிலங்கள் மீட்பு

அறநிலையத்துறையை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சாதனைகளுக்கு மகுடமாக பழனி முத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

sundarsvpr
செப் 08, 2024 15:38

ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். அவனும் கொடூரமாய் அழிந்தான். இன்று போய் நாளை வா என்று கேவல பட்டான். இது எல்லோருக்கும் பொருந்தும். நம்பிக்கைக்கு நாங்கள் தடையில்லை என்று சொல்வதும் ராவணனின் சிவ பக்திப்போல்.


shakti
ஆக 31, 2024 17:00

அப்புறம் ஏன் சனாதனம் ஒழிப்பு என்று குடும்பத்தோடு கூவினாராம் ??


Palanisamy T
ஆக 26, 2024 14:04

உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள் இந்த வாசகத்தை சொன்னவர் கருணாநிதி அவர்கள். இதுவாவது உங்களுக்கு ஞாபகம் உண்டா ? தமிழகத்தில் அவர் கோபுரங்களென்று தாழ்ந்த உள்ளங்களென்று சொன்னதும் எதை யென்று உங்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு தமிழர்களின் சைவ வழிப்பாட்டில் அவருக்கு மரியாதை. தெரிந்தும் அவரை மீண்டும் மீண்டும் முதல்வராக மக்கள் தேர்வுச் செய்தார்கள். நீங்களும் அதே தவறுதான் இன்னும் இப்போதும் செய்துக் கொண்டு இருக்கின்றீர்கள். நல்ல படிப்பறிவாளர்கள் தமிழை நன்கு கற்றவர்கள் அவர்களுக்கு மட்டும்தான் தமிழின் அருமை தெரியும், சைவ வழிப்பாட்டின் மேன்மையும் மென்மையும் புரியும். இவ் வழிப்பாடு எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. சைவ வழிப்பாடு அதன் மேல் கல்லெறிய வேண்டாம். ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால் மாற்றங்கள் நிச்சயம். பாஜக தமிழகத்தை ஆள்வது உடன்பாடில்லை.


Muralidharan S
ஆக 26, 2024 11:45

ஹிந்துக்கள் திருமண சடங்குகளை , வேத மந்திரங்களை இழிவாக பேசியது வேற வாய். இப்ப சீக்கிரம் தேர்தல் வருவதால், நம்பிக்கைக்கு தடை இல்லை என்று பேசுவது வேற வாய்.


sridhar
ஆக 26, 2024 11:24

அடடா , என்ன பெரிய மனசு - ஏன் தடை பண்ணித்தான் பாரேன் .


Mahalingam Laxman
ஆக 26, 2024 09:30

STALIN SAYS THE DRAVIDA MODEL GOVERNMENT IS NOT OPPOSED TO ANYBODY"S BELIEF. BUT THE FACT AND THE HAPPENINGS IN TAMIL NADU PROOVE QUITE OPPOSITE. THESE KUMBABISHEHAMS AND CONFERENCES ARE EYE WASH. MAY BE TO MAKE MONEY OUT OF TEMPLE FUNDS. IF NOT TO CHEAT PUBLIC AND GET GOF FEARINGS HINDUS VOTES


God yes Godyes
ஆக 26, 2024 08:47

நம்பிக்கைக்கு தடை இல்லை.சரி.அப்ப ஏன் கடவுளையும் குறிப்பிட்ட இனத்தையும் தாடிக்காரன் திட்டும் போது ஆமாம் போட்டு கம்முனு இருந்தீங்க.


ManiK
ஆக 24, 2024 18:06

இந்த மாநாடுக்கும் இந்துகள் பலரின் குலதெய்வம் மருகனுக்கும் சம்மந்தம் இல்லை. இது முழுதாக சகியின் சதி, பாபுவின் பாபம், ச்டாலினின் ஏமாற்று.


P. Siresh
ஆக 24, 2024 17:42

செய்து பாலம் ராமர் கட்டினார் என்பதும் மக்களின் நம்பிக்கை. அப்போது இவர்கள்தான் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேட்டார்கள்.


KRISHNAN R
ஆக 25, 2024 20:43

அது மட்டுல்லாமல்...... ராமர் சேது... கடல் வழி ஏற்படுத்த..... துளை கப்பல்.... கொண்டு.....துளையிட்டு....நடக்கவில்லை.....


P. Siresh
ஆக 24, 2024 17:40

ஆன்மிகத்தை பற்றி பேசாத திரவிடமாடலும் இன்று ஆன்மிகத்தை பற்றி பேசுகிறது.இதற்கு மொத்த காரணம் பா.ஜா.க.வின் இந்து மத நிலைப்பாடு .முதல்வர் பேச்சு சநாதானத்திற்கு கிடைத்த வெற்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை