உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்

 எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்

சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வும் முதல்வருமான ஸ்டாலின், கட்சியின் பாக முகவர்களுடன் கலந்து ரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: சமீப நாட்களாக எங்கு சென்றாலும், எஸ்.ஐ.ஆர்., என்னும் வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தான் பேசுகின்றனர். இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், நாங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் வாயிலாக, மத்திய அரசு, இப்படியொரு சுமையை எல்லார் மீதும் திணித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நடக்கிறது. உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி விடுவரோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது. அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காகவே, நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்; போராட்டம் நடத்தி உள்ளோம். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை கொடுக்கும் நெருக்கடிகளை கடந்துதான், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு, தி.மு.க.,வினரும் கூட்டணி கட்சியினரும் அயராது உழைக்க வேண்டும். வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நிறைவுற 20 நாட்களே உள்ளன. காலம் குறைவாக இருப்பதால், தலை சுற்றும் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை, ஒவ்வொரு வாக்காளரும் முழுமையாக நிரப்பி அளிக்க, தி.மு.க.,வினர் உதவிட வேண்டும். வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பெரிய அளவில் கொந்தளித்து போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் உதிரி கட்சியினர், வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை ஆதரித்து வழக்கு போட்டுள் ளனர். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 82 )

SRITHAR MADHAVAN
நவ 22, 2025 12:56

படித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது எப்படி உங்களுக்கு சாத்தியம்


Raj
நவ 22, 2025 05:50

ஐயா வணக்கம். அந்தப் படிவத்தைப் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்த இந்த வருடத்தில் 82 வயதாகும் வயதான அம்மா அந்த வயதில் உள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த இன்னும் சில வயதான அம்மாக்கள் எல்லோரும் சுலபமாகப் படித்துப் புரிந்து கொண்டு, நிரப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் தயங்கியவர்களுக்கு அதிகாரிகளே உதவி செய்து இருக்கிறார்கள். என்ன எல்லோருக்கும் அப்பா, அம்மா தாத்தா பாட்டி பெயர்களெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் போலிருக்கு. அதோடு தற்போதைய முகவரியைத் தவிர முன்பு எங்கெல்லாம் குடி இருந்தார்கள் எனவும் சிலருக்கு விசாரித்திருக்கிறார்கள். இவ்வளவு தான். மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள் மக்களுக்கு இந்தப் படிவம் புரியாதோ என அச்சப்பட வேண்டாம். சாதாரணமாக பள்ளிப் படிப்பு மட்டுமே தமிழில் படித்தவர்களுக்கே புரிகிறதாம். சுத்தமாக ஒன்றும் தெரியாது என சாதிப்பவர்களுக்கு அவரவர் அடையாள அட்டைகளைப் பார்த்து பூர்த்தி செய்து தருகிறார்கள். அதனால் கவலையேபடாதீர்கள். மக்களுக்கு துணிவைக் கொடுத்து இதெல்லாம் ஒன்றுமே கிடையாது தேர்தலில் வாக்களிக்க வேண்டிய முக்கிய கடமைக்காக இந்தச் சின்ன சிரமத்தை நாம் ஒன்றாக ஏற்றுக் கொண்டு கடந்து விடலாம் என்றல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். உங்களுக்கு ஏன் தமிழக மக்களின் தமிழ் வாசிப்புத் திறனின் மேல் அவ்வளவு அவ நம்பிக்கை. வாக்காளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டால் அவர்களுக்கு யாருக்கு விருப்பமோ அந்த நபர்களுக்கு வாக்களித்து விட்டுப் போகப் போகிறார்கள். அது தானே ஜன நாயகம்.


vee srikanth
நவ 21, 2025 12:48

Sir - நீங்களே SIR படிவத்தை தயார் செயுங்களேன்


vee srikanth
நவ 21, 2025 12:35

A4 பேப்பர் பெருசா இருக்குது - துண்டு சீட்டு அளவுக்கு SIR பேப்பர் இருக்கணும்


Venkateswaran Rajaram
நவ 21, 2025 10:47

இதற்குத்தான் நாலு எழுத்து படிங்க படிங்கனு உங்க மேல உள்ள அக்கறையில்லை சொல்றோம் ஆனா கேட்டாத்தானே


A CLASS
நவ 17, 2025 19:58

உங்ககிட்ட யாரு குடுத்த அந்த படிவத்த...


M Ramachandran
நவ 16, 2025 16:55

ஏன் சுத்தாது.


தமிழன்
நவ 15, 2025 22:10

ஆதார் கார்டு வந்த பொழுது அது வரக்கூடாது தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் அதை தடை செய்ய வேண்டும் என்ற கதறிய கூட்டம் இன்று இதற்காக கதறுகிறது...


சிந்தனை
நவ 15, 2025 22:09

ஒன்றாம் வகுப்பு கேள்வித்தாளை பார்த்தே மயக்கம் போட்டு விழுந்தவர் தானே நீங்கள்


joe
நவ 15, 2025 19:24

உம்மைப்போல் உள்ள ஊழல் அரசியல் வாதிகளுக்கு இப்படித்தான் தலை சுற்றும் . .ஊழலின் மொத்த உருவமே தி மு க எனும் ரவுடிகளின் கூட்டம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை