உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண், உறவுகள், மொழியை மறக்காதீங்க: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மண், உறவுகள், மொழியை மறக்காதீங்க: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: 'மொழியை மறக்காதீங்க. இந்த மண்ணையும், மக்களையும் மறக்காதீங்க. உங்கள் உறவுகளை மறக்காதீங்க' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை நந்தம்பாக்கத்தில், அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ தேவி சிவனாந்தம், லட்சமி சோமசுந்தரம் உள்ளிட்ட அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் தாயகத்தில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் கொடுத்தனர். அயலகத் தமிழர்களால் பாலைவனம் சோலைவனமாகியது.

தொப்புள் கொடி

தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அமெரிக்காவிற்கு நான் சென்ற போது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது. எந்த தூரம் தமிழில் இருந்து நம்மை தூரப்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ இந்த கருத்தரங்கு உதவும். வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

ரூ.10 கோடி

இன்னலுக்கு உள்ளானவர்களின் புன்னகையை மீட்டுத் தந்திருக்கிறோம். என் ஆட்சியில் உருவான திட்டங்களில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது. அயலகத் தமிழர்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்கள் அயலக நாட்டிற்கு சென்று பயிற்சி அளிப்பார்கள். இதற்கான செலவை அரசு ஏற்கும். இந்த திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழக அரசின் செயல்பாடுகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மறக்காதீங்க...!

என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல, செயல். பூமியில் எங்கு வசித்தாலும் உங்கள் அடையாளத்தை விட வேண்டாம். உங்கள் வேர்களை மறக்காதீங்க. மொழியை மறக்காதீங்க. இந்த மண்ணையும், மக்களையும் மறக்காதீங்க. உங்கள் உறவுகளை மறக்காதீங்க. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் சகோதரன் தமிழகத்தில் நான் இருக்கிறேன் என்பதை மறக்காதீங்க. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். வாழ்வதும், வளர்வதும் தமிழாகவும், தமிழர் இனமாகவும் இருக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் பொங்கல் வாழ்த்து!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம்; மகிழ்ச்சி பெருவிழாவாக பொங்கலைக் கொண்டாடுவோம். தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் கவர்னர் படிக்காமல் வெளியேறினார்.

7வது முறை ஆட்சி

பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கிடும் வகையில் சட்டசபையில் சட்டத்திருத்த முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகளை எதிர்கொள்கிறேன். 7 வது முறையாக தி.மு.க.வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

theruvasagan
ஜன 13, 2025 11:39

மண் ஆந்திரா மண். மொழி தெலுங்கு. உறவுகள் ஓங்கோலில் உள்ளன. இது எல்லாத்தையும் மறந்துவிட்டு அடுத்தவங்களுக்கு எதுக்கு அட்வைஸ்.


venugopal s
ஜன 13, 2025 05:58

தமிழர்கள் தம் மொழியை தம் மதத்தை விட அதிகமாக நேசிக்கும் வரை பாஜக போன்ற தீய சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது!


Velayutham rajeswaran
ஜன 13, 2025 10:56

இதனால் தான் தமிழரின் பாரம்பரிய மதமும் நம்பிக்கைகளும் திராவிடத் தால் சிதைக்க ப்படுகிறது


Keshavan.J
ஜன 13, 2025 11:30

Hello L gopal after posting your comment read all the comments from others. Nobody talk about BJP but insulting your Ongol CM nastily. for 200 rupees dont go too low.


sankaranarayanan
ஜன 12, 2025 21:26

மொழியை மறக்காதீங்க. இந்த மண்ணையும், மக்களையும் மறக்காதீங்க. உங்கள் உறவுகளை மறக்காதீங்க என பேசி பேசியே மக்களின் முழி பிதுங்கி நிற்கிறது. நாட்டில் சுபிட்சமே இல்லை எங்குபார்த்தாலும் கொள்ளை,கற்பழிப்பு போதைப்பொருள் நடமாட்டம், ஆர்ப்பாட்டம்,போராட்டம்,வெளி நடப்பு, தற்கொலைகள்,விலைவாசி உயர்வு ,வேலையின்மை, மதசன்டை, சச்சரவுகள் இவைகள் தான் தலை தூக்கி நிற்கின்றன.


GoK
ஜன 12, 2025 20:54

எப்படியெல்லாம் உறவுகள்


RAMAKRISHNAN NATESAN
ஜன 12, 2025 18:36

என் அப்பா மாதிரி நானும் மொக்கை போட்டுக்கிட்டே இருக்கேன் ..... இருந்தாலும் யாரும் என்னை சாணக்கியர் ன்னு கூப்புடுறதில்ல ........


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 12, 2025 18:27

முதலில் இவர ல்லவா அப்படி இருந்து காட்ட வேண்டும். தமிழ் மரபுப்படி பொங்கல் அன்று வேட்டி அணிவாரா?


என்றும் இந்தியன்
ஜன 12, 2025 18:18

மண் - இது தமிழ்நாட்டு மண் ஒங்கோல் மண் அல்ல உறவுகள் - இது தமிழ்நாட்டு உறவுகள் ஓங்கோல் உறவுகள் அல்ல மொழி - தமிழ் மொழி இது தெலுங்கு அல்லவே அல்ல அதை மறுத்துத்தான் நீங்கள் இவ்வளவு கேவலமான நிலைக்கு குடிகார டாஸ்மாக்கினாட்டாகி விட்டீர்கள் தமிழகத்தை / தமிழ்நாட்டை


Karthik
ஜன 12, 2025 18:16

வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு ஒரிஸ்ஸாவில் நடைபெற்றது. உடனே நமது முதல்வருக்கு துண்டுசீட்டு புத்தி வேலைசெய்துவிட்டது. வெளிநாடு வாழ் தமிழர் மாநாடு நடத்திவிட்டார், தமிழர்களை ஏமாற்றுவதற்காக. சொந்த புத்தி இல்லாத முதல்வர்.


Karthik
ஜன 12, 2025 18:12

நீங்கள் சொல்ல வந்தது ஈர வெங்காய ராமசாமி சொன்ன உறவை பத்தியில்லையே??


Rafiq Ahamed
ஜன 12, 2025 16:11

எங்கள் தளபதி முதல்வர் மு க ஸ்டாலின் சரியாக சொன்னார் 2026 தமிழக சட்ட சபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அது உறுதி


Keshavan.J
ஜன 13, 2025 11:33

உங்கள் தலைவர் சொல்லுகிறார் கடவுள் இல்லை என்று , நீங்கள் ஆமோதிக்கிறீர்களா. பிஜேபி வேண்டாம் தமகவிக்கு வாக்கு போடலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை