உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் ரகசிய திட்டத்தால் உருவாகும் போட்டி நாம் தமிழர்?

தி.மு.க.,வின் ரகசிய திட்டத்தால் உருவாகும் போட்டி நாம் தமிழர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேற வைத்து, நாம் தமிழர் கட்சியை உடைக்க, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது.தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும், சீமான் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க சீமான் விரும்பினார். தன் எண்ணத்தை பல இடங்களிலும் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால், சீமான் மட்டுமே பேசிவந்த, 'தமிழ் தேசியம்' என்ற அரசியல் கொள்கையை, விஜய் தன் கொள்கையாக அறிவித்தார். கோபம் அடைந்த சீமான், விஜயை வெளிப்படையாக விமர்சிக்க துவங்கினார். அத்துடன் சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது, அவரது கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர். இதனால், பல மாவட்டங்களில், கட்சி செயல்பாடு குறைந்துள்ளது. கட்சியில் இருந்து வெளியேறுவோர், சீமான் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை, சீமான் கடுமையாக விமர்சித்து பேசுகிறார். அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இது, தி.மு.க., தலைமைக்கு பிடிக்கவில்லை. அதேநேரம், சீமான் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் வளர்ந்து விடுவாரோ என அஞ்சுகின்றனர். எனவே, நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக உடைக்கும் பணிகள், மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவர்கள், நா.த.க.,வில் அதிருப்தியில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசுகின்றனர். அதன்பின், சீமானுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து, நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர்களை விலகச் செய்கின்றனர். ஆனால், அவர்களை தி.மு.க.,வில் சேர்ப்பது கிடையாது. அப்படி சேர்த்தால், விஷயம் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால், அதை செய்வதில்லை. இவ்வாறு விலகும் மொத்த பேரையும் ஒருங்கிணைத்து, போட்டி நாம் தமிழர் கட்சியை துவக்கவும் திட்டமிட்டுஉள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mr Krish Tamilnadu
நவ 16, 2024 23:43

அனைத்தையும் மாற்றி யோசிக்க வேண்டும் இல்லை என்றால் இப்படி தான்.


Dhurvesh
நவ 16, 2024 21:20

என்ன இருந்தாலும் மோடி லெவெலுக்கு முடியாது MLA விலைக்கு வாங்கி ஷிண்டே பவார் இப்படி ஜார்கண்ட் சம்போ இப்படி சம்பவம் அனால் சிங்கி பசங்கள் இங்கு அலப்பறை DMK ஒழிப்பேன் என்று சொல்லி இப்படி ஆகிவிட்டார் , ஜெயா வே தண்ணி குடிச்சி முடியல , அடுத்து JOESPH VIAJY சங்கவி முன்னாள் புருஷர் அவர் கதை ஆக போடுதோ ஜீசஸ் க்கு தான் வெளிச்சம்


sridhar
நவ 16, 2024 20:30

திமுக செய்த ஒரே ஒரு நல்ல செயல். பாராட்டுகள் .


Sivagiri
நவ 16, 2024 19:19

இதுக்கு என்ன பெரிய ரகசிய திட்டம் வேண்டியிருக்கு ? , அங்க விட அஞ்சு ரூபா கூட குடுக்குறோம்னு சொன்னா எல்லாம் மாத்தி போட்டுக்கிட்டு போயிட போறாங்க , , , எப்ப எப்ப ன்னு பாத்துக்கிட்டிருக்காய்ங்க


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 16, 2024 17:53

திமுகவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது புது செய்தி இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியை உடைத்து மணலி கந்தசாமி கட்சி துவங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சியை உடைத்து குமரி ஆனந்தன் காங்கிரஸ் என்றும் நெடுமாறன் காங்கிரஸ் என்றும் ஆக்கி இன்றுவரை தனது அரசியல் எதிரிகளை பணத்தால் வீழ்த்தும் ஒரே இயக்கம் திராவிட மாடல். இதனால பணப்புழக்கம் மட்டுமே அதிகரிக்கும்


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:28

காலையில், "விஜய் லாரி யில் அடிபட்டு சாவே பாத்துக்கோ " என்பார். மாலையில் அவன் என் தம்பி என்பார். மறுநாள், எதிரி எதுரி தான், இதுல அண்ணன் தம்பி இல்லை " என்பார். உடனே சீமான் அல்லக்கைகள் விஜய் யைப் போட்டு தாக்குவானுங்க. ஆனால் மானங்கெட்ட விஜய் இதைக் கேட்டுட்டு, சீமானை சகோதரர் என்பார். மீண்டும் சீமான் ராங் ப்ரோ என்பார். மீண்டும் தம்பி என்பார். போயா யோவ்.. வந்ததிலிருந்து லேகியம் வித்துக்கிட்டு.... இதுல போட்டி நா த க உருவாக்கறாங்களாம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:23

நாம் டம்ளர் ஒரு டமாஸ் கட்சி. ஒரு பைத்தியகார வெங்கம்பய தான் அதன் ஒருங்கிணைப்பாளர். "வெங்கம்பய" என்றால் என்ன என்று தெரியல. இது சீமான் தன்னைப்பற்றி சொன்ன வார்த்தை. தமிழ் தேசிய தமிழில் இப்படி ஒரு வார்த்தை இருக்கு போல. சொந்த கட்சி கூட்டத்துக்கே, பாதுகாப்பு பவுன்சர்ஸ் வெச்சுக்கிட்டு போறார். சொந்த கட்சிக்காரர்களை அடா புடா ங்கறது, வெளிய போடா ங்கறது, த்தா, ங்கொம்மா, பிசிறு என்றெல்லாம் நாகரிகமா சொல்றது எல்லாம் சீமான் தான்.இது ஒரு கட்சி இதை உடைக்க திமுக டைம் வேஸ்ட் பண்ணுமா? அவசியமே இல்லை. மேலும் இவருக்கு விழுந்த 7.5% ஓட்டுகள் நிச்சயம் திமுக ஓட்டுகள் அல்ல. திமுக எதிர்ப்பு ஓட்டுகள். எனவே இதை திமுக உடைக்காது.


Ganesh
நவ 16, 2024 16:55

இது ரொம்ப தப்பு சார்... ரெண்டு திராவிட கட்சிகளின் அரசியல் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் ரெண்டுமே எதிர் அணியினரை இதயத்தில் இடம் கொடுத்தோ அல்லது அரவணைத்தோ அழிப்பார்கள்... உதாரணம்... எம்ஜிர் விலகியபிறகு இந்த மாடல் உருவாக்கப்பட்டது... விஜயகாந்த், கமலஹாசன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:55

பாஜக வின் அரசியலும் இதே தான். அதிமுக வோடு கூடி, அதை பலவீனப்படுத்தியதுஓ பி எஸ் கூட கூடி அனாதை ஆக்கினது. சரத்குமார் கட்சியை காலி பண்ணியது. சிவசேனா வை உடைத்தது. தேசிய காங்கிரஸ் ஸை சரத்பவார், அஜீத்பவார் னு உடைத்தது எல்லாம் பாஜக தான். சும்மா திராவிட கட்சிகள் னு உருட்ட போராடிக்கலியா??.


Barakat Ali
நவ 16, 2024 11:40

நாம் தமிழரை இறக்கிய திமுகவுக்கு அதை உடைக்க அதிகாரமில்லையா ?? என்னங்க இது ??


குமரி குருவி
நவ 16, 2024 11:30

நாம் தமிழர் கட்சியை உடைக்க தி.மு.க.முயற்சிக்கிறது என்பது தவறு... நாம் தமிழர் தம்பி தங்கைகள் கட்சியை விட்டு வெளியேற சீமான் சர்வாதிகாரம் முக்கியமான காரணம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை