உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது

மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகை மாவட்ட தொழில்மைய மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் டூவிலர் ஸ்பேர் கடை வைக்க நாகை மாவட்ட தொழில்துறை மையத்தில் கடந்த 2024ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.இதன் பேரில் கடந்த பிப்., 28 ம் தேதி ஐஓபி வங்கியில் ரூ.5 லட்சம் பணம் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 25 சதவீதம் மானியத்தொகையான ரூ.1.25 லட்சத்தை விடுவிக்க மாவட்ட தொழில் மைய மேலாளர் அன்பழகனை சதீஷ்குமார் தொடர்பு கொண்டார். அந்த மானியத்தை விடுவிக்க அன்பழகன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.இதனை கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, இன்று(எப்.,01) சதீஷ்குமார் ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை கொடுத்தார்.லஞ்சப்பணத்தை பெற்ற அன்பழகனை, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரது அறையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.01 லட்சப்பணம் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V RAMASWAMY
ஏப் 17, 2025 08:55

கோப்புகளுக்கு பதிலாக, இவர் மேசையில் வீட்டு சாப்பாட்டு கேரியர், தண்ணீர் பாட்டில் இவைதான் தென்படுகிறது. அலுவலகத்திலும் இவர்களுக்கு முக்கிய வேலை லஞ்சம் உட்பட சாப்பிடுவது தான்.


Perumal Pillai
ஏப் 01, 2025 20:41

"அவர்" வழி இவர் வழி .


Visu
ஏப் 01, 2025 20:08

ஏன் உங்களுக்கெல்லாம் மாதசம்பளம் இல்லையா...பணம்தான் முக்கியம்னா வேற பிஸ்னஸ் பண்ணலாமே


V RAMASWAMY
ஏப் 17, 2025 18:37

கேடு கேட்ட ஜென்மங்கள். என்ன தண்டனை மேலே கிடைக்குமென்று தெரிய ஆவலிருந்தால் சிங்கப்பூரில் டைகர் பாம் கார்டன் என்று ஒன்று இருக்கிறது அங்கு சென்று பாருங்கள் தெரியும். குலை நடுங்கும். வாழ்நாளில் குற்றம் செய்யமாட்டார் எவரும். சிங்கப்பூர் செல்ல சிலவுக்கு லஞ்சம் வாங்கினால் தண்டனை இன்னும் கடுமையாகும்.


Ramesh Sargam
ஏப் 01, 2025 19:50

தினம் தினம் பல அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது மாட்டிக்கொண்டு கைதாகிறார்கள். பிறகு என்ன ஆகிறது. சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெருகிறார்களா, அல்லது திமுக மேலிட சிபாரிசு மூலமாக தண்டனையிலிருந்து தப்பித்து, மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்களா?


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 19:33

அப்பா.. க்கு பிடித்த பெயர் அன்பழகன்.


M S RAGHUNATHAN
ஏப் 01, 2025 19:21

இவர் இட ஒதுக்கீடு மூலம் வேலைக்கு சேர்ந்தவராக இருப்பின் உடனே பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


Amar Akbar Antony
ஏப் 01, 2025 19:03

இந்தத்துறை பெருங்கடல். சிக்கியதோ சிறுதுளி.


Jagan (Proud Sangi)
ஏப் 01, 2025 18:46

இடஒதுக்கீடு கேஸ் -பார்த்தாலே தெரியுது திறமையில்லாத சமூக நீதி கூட்டம் மாதிரி இருக்கு . என் அப்பா சொல்வார்,அவா–க்கள் அரசு பதவியில் இருந்த போது இவ்ளோ லஞ்சம் இல்லை என்று.


Yaro Oruvan
ஏப் 01, 2025 18:30

இப்படி சிக்கும் அயோக்கியனுங்களை ஏன் வேலையில் இருந்து தூக்க மாட்டேங்குறாங்க.. சிக்குனா டிஸ்மிஸ் என்ற பயம் வரணும் .. அப்பத்தான் கொஞ்சம் யோசிப்பானுவ .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை