உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

சென்னை; டெல்டாக்காரன் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மை எனில் நெல் கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை; நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது. மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதை விடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.எனவே, 'டெல்டாக்காரன்' என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொள்வது எள் அளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிவகுமார்
அக் 18, 2025 18:21

விடுங்க பாஸ்! அவர வச்சு காமெடி ஒன்னும் பண்ணலியே! தமிழகத்தை ஒரு குடும்பமாக எண்ணிப்பாருங்கள் பாருங்கள் - அப்போது புரியும் இந்த விடியல் அரசின் சாதனைகள்! On a serious note, paddy sacks getting wet and spoiled without proper storage is a perennial affair in the delta districts. Farmers' toil goes waste brings tears to the common man.


sundarsvpr
அக் 18, 2025 13:44

நெல் கொள்முதல் அரசு செய்யவில்லை என்று விவசாயிகள் ஓன்று இணைந்துஏன் போராடவில்லை.? உண்மையான அக்கறையுள்ள எதிர்க்கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றனர்? காரணம் விவசாயிகள் இடையே அரசியல் சார்பு வேறுபடுவதால் இந்த அவல நிலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை