உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை

நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கலில் தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன், 56. இவரது மனைவி பிரமிளா, 51. திருச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலராக சுப்ரமணியன் பணிபுரிந்து வந்தார். பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.இந்நிலையில், இன்று (ஜூலை 06) இருவரும், வகுரம்பட்டியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களது தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையா? அல்லது வேறு ஏதும் பிரச்னையா? என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 06, 2025 11:37

இதற்கும் திமுகவினர்தான் காரணம் என்று பலர் கருத்து தெரிவிக்கக் கூடும். ஏன் என்றால் அந்த அளவுக்கு மோசமான ஆட்சி திமுக ஆட்சி.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 06, 2025 13:30

ஒருவேளை கட்சிக்காரன் எவனாவது தம்பதியை ரயில் முன் தள்ளிவிட்டிருப்பானோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை