உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்றும் நரேந்திரன்... இன்றும் நரேந்திரன்...: 132 ஆண்டுக்குப் பிறகு கன்னியாகுமரி பாறையில் தியானம்

அன்றும் நரேந்திரன்... இன்றும் நரேந்திரன்...: 132 ஆண்டுக்குப் பிறகு கன்னியாகுமரி பாறையில் தியானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்த பாறையில் 1892 ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இன்று அதே பாறையில் 132 ஆண்டுகளுக்கு பிறகு நரேந்திர தாமோதர தாஸ் என்ற பெயரை தாங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தியானம் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் நடந்த அகில உலக அனைத்து சமய மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் முன்பு, கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். பின்பு அமெரிக்கா சென்ற அவர், சிகாகோ மாநாட்டில் சிறப்பாக பேசி ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகறிய செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=85b5l4uz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல, ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும் தியானம் மூலம்தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி, விவேகானந்தர் தியானம் இருந்த அதே இடத்தில் தியானம் இருப்பது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவர் பெயரும் நரேந்திரன் என்று இருப்பது தற்செயல் ஆனதா அல்லது தெய்வீகச் செயலா என சமூக வலைதளங்களில் விவாதம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Sathiyapriya Palanisamy
ஜூன் 01, 2024 15:02

விவேகானந்தர் பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. because poured words cant Collect it.


Ve Mani
ஜூன் 01, 2024 06:43

விவேகானந்தரோடு மோடியை சமன் படுத்துதல் தவறு. விவேகானந்தர் மாபெரும் ஞானி, துறவி மற்றும் மனிதநேயம் மிக்க பேராத்மா. மோடி வெறும் விளம்பரம் செய்யும் அரசியல் வாதி.


Mani . V
ஜூன் 01, 2024 06:15

இவரால் விவேகானந்தரின் புகழ் பன்மடங்கு பெருகும். ஏன் அவரைப்பற்றி இப்பொழுதுதான் பலருக்கு தெரியவே வரும்.


தாமரை மலர்கிறது
மே 31, 2024 19:00

விவேகானந்தர் பெருமைக்குரியவர். போற்றுதலுக்குரியவர். அவர் செய்தது தியானம். மோடி செய்வது போட்டோ ஷூட்டிங்.


Saravanakumar
ஜூன் 01, 2024 10:33

நீங்கள் சொல்வது மிகவும் சரி


Mettai* Tamil
மே 31, 2024 17:39

அவர் தான் இவர்


Saravanakumar
ஜூன் 01, 2024 10:35

அவர் ஆன்மீகவாதி இவர் விளம்பரப் பிரியர் அரசியல்வாதி


Rahulakumar Subramaniam
மே 31, 2024 17:30

ஆன்மீக பெருமானே வாழ்க . வெல்க மோடிஜி .


RAVIKUMAR
மே 31, 2024 17:23

ம்ம்ம் ...முட்ட்டு குடுத்தல் எப்பிடியெல்லாம் எழுதவைக்குது .....


sankarkumar
மே 31, 2024 14:55

முதலில் உங்களுக்கு வேண்டும் மெடிகேஷன்.


LION Bala
மே 31, 2024 13:43

ஐயா நீங்கள் போட்டிருக்கும் தலைப்பும் ஒப்பிடுதலும் சரியில்லை, விவேகானந்தரின் முகத்தில் உள்ள பொலிவும், தேஜஸும் கவனித்து பாருங்கள், முந்தயவர் அறிவு ஜீவி, ஞான ஒளி, தனது 39 வயதில் முக்தியை பெற்ற பெருமான் அவர். பிந்தயவர் பற்றி கருத்து குறை விரும்பவில்லை.


Ramanujadasan
மே 31, 2024 14:47

தெய்வம் மனுஷ ரூபனே - இந்த வரிகள் உங்களுக்கு புரிந்து இருந்தால் சரி


sankar
மே 31, 2024 16:07

உம்முடைய கருத்து தேவை இல்லை - உலகம் அறியும் அவரது தேஜஸை -


Gurusamy
மே 31, 2024 13:36

பாரதம் காக்க அழைக்கிறார். ஜெய் மோடி சர்க்கார்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ