உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய நல்லாசிரியர் விருது; தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு, நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, புதுச்சேரியைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஆக 26, 2025 02:09

வாழ்த்துக்கள்.


PerArivalan
ஆக 25, 2025 22:42

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படல் வேண்டும்....இந்த கருத்தை ஆதரிக்கிறேன்


Subramanian Marappan
ஆக 25, 2025 21:31

தமிழ்நாட்டில் ஆசிரியர் சம்பந்தப்பட்ட எல்லா விருதுகளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பெறுகிறார்கள். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டுடன் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி பெரும் பங்களிப்பை கல்வி வளர்ச்சிக்கு தருகிறார்கள். அவர்கள் பங்களிப்பு பாரட்டப்படுவதில்லை. எனது சந்தேகம் எந்த தரவுகளை வைத்து ஆசிரியர்கள் தகுதியை நிரநயக்கின்றனர்.


Radhakrishanan Madurai
ஆக 25, 2025 21:24

This process involve many 'untold ' process.


Vasan
ஆக 25, 2025 20:59

Best wishes for the teachers, who have been ed for receiving the prestigious award. Teachers are selfless, and are like stationary ladder. Students use them to climb the career ladder from bottom to top, yet the teachers remain as they were earlier.Prestigious awards like this are the only motivation for them.


K.SANTHANAM
ஆக 25, 2025 19:45

விருதுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிபவர்களுக்கு மட்டுமே வழங்க பட வேண்டும். பி.எஸ் செகண்டரி பள்ளி என்பது பீஸ் வாங்கும் பள்ளி. அதில் பணிபுரிந்தவர் எதற்கு விருது


Vasan
ஆக 25, 2025 20:56

Award is for the Teacher, for her contribution to the Education tem.


R. SUKUMAR CHEZHIAN
ஆக 25, 2025 18:36

வணங்குகிறேன்.


Subramanian
ஆக 25, 2025 18:10

வாழ்த்துகள்


K.n. Dhasarathan
ஆக 25, 2025 17:27

பல ஆயிரம் ஆசிரியர்கள் வேலை செய்யும் தமிழகத்திற்கு, இருவர் மட்டுமே தேர்வு, நல்ல கூத்து பல பல விஞ்ஞானிகளை, பொறியாளர்களை, ஆடிட்டர்களை உருவாக்கும் தமிழகத்திற்கு இன்னும் அதிகம் தேர்ந்த்தெடுக்க வேண்டும் அதுதான் அந்த தேசிய விருதிற்கு பெருமை.


sankar
ஆக 25, 2025 18:59

எல்லோருக்கும் குடுத்துருவோமா . தமிழக அரசு மீது எல்லா ஆசிரியர்களும் கடுப்பில் இருக்கிறார்கள் . இப்போ பொய் தமிழக அரசு நாள்சிரியர் விருதுனு அரம்பைச்சா கடுப்பாயிருவாங்க


Perumal Pillai
ஆக 25, 2025 17:16

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படல் வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை