உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை: ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்

போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை: ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் துவங்கி, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அங்கிருந்து, மறு மார்க்கத்திலும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், தினமும், 70,000 வாகனங்களுக்கு மேல் செல்கின்றன.விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், ஆறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்னும் பாலப் பணிகள் நிறைவு பெறவில்லை. ஆறு இடங்களிலும், சாலையின் நடுவே பாலம் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டுஉள்ளதால், சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.ஆட்கள் பற்றாக்குறை, மண் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களை காட்டி, பணி இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பணி முடிய இன்னும் ஆறு மாதங்களாகும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். சர்வீஸ் சாலையும் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த, 21ம் தேதி சூளகிரி அருகே அட்டகுறுக்கி, கோனேரிபள்ளி ஆகிய இரு இடங்களில், சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சமீபத்தில் பெய்த மழையால், போலுப்பள்ளி, மேலுமலை பகுதியில் பாலம் வேலை நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல, மூன்று மணி நேரத்திற்கும் மேலானது.பாலப் பணிகளின் மந்த கதியால் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், மருத்துவமனை செல்ல வேண்டிய நோயாளிகள், பயணியர் என அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர். இந்த பகுதியில், 12 மாதங்களில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.போலீசார் அழுத்தம் கொடுத்தும், பாலப் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த நிறுவனங்கள் முன்வரவில்லை.தகுதியில்லாத நிலையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், அடுத்த ஆறு மாதத்திற்கு டோல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி டோல்கேட்டில், ஒரு நாளுக்கே பல லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சாலையில் பயணிக்கும் வசதியை மட்டும் செய்து கொடுக்கவில்லை.தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஊருக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அதிகரிக்கும்.கிருஷ்ணகிரி காங்., -- எம்.பி., கோபிநாத் கூறுகையில், ''கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்தில், பல்வேறு எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.''டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என வலியுறுத்துவோம்,'' என்றார்.டோல்கேட் நிர்வாகத்தினர் கூறுகையில், 'சில மாதங்களுக்கு டோல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்பதை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தான் முடிவு செய்ய முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S MURALIDARAN
அக் 28, 2024 15:55

நியாயமான கோரிக்கை. போராட்டத்தை கையில் எடுத்தால்தான் அரசு பணியும்.


அப்பாவி
அக் 28, 2024 06:34

ஒன்றிய திட்டங்களை குத்தம் சொல்லப்படாது. சொன்னா உனக்கு தேஷ்பக்தியே கிடையாது.


K r Madheshwaran
அக் 27, 2024 23:25

அதென்னவோ ஒரே சாலையில் ஐந்து ஆறு இடங்களில் மேம்பால வேலைகள் செய்து செயற்கையாக பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.ஆள் பற்றாக்குறை என்றால் அவர்களுக்கு ஏன் காண்ட்ராக்ட் தரவேண்டும். எல் அண்ட் டி நிறுவனம் மிக சிறப்பாக செய்கிறதே அவர்களுக்கு தரலாமே. மேலும் ஒரே ரோட்டில் இப்படி செய்வது கேவலமான செயல் நிர்வாக திறமையற்ற நிலையா என்ற கேள்வி வருகிறது.


R Barathan
அக் 27, 2024 15:18

Lots of good developments have taken place in BJP governance, especially in road infrastructure right from late Vajpayee term Golden Quadruplicate scheme. But what irks us is the day robbery of toll ges. So far neither the central government or NHAI or Ministry of Road Transport or the companys which have undertaken toll collection have not disclosed the income earned and expenses incurred for maintenance of roads. Toll ges have been more than tripled in the last few years. While revision of toll is done exactly once in six months, the same yardstick is not applied for road maintenance especially the SERVICE ROADS. I am from TRICHY I am seeing badly maintained SERVICE ROADS in most of places. Toll ges have been collected for more than 15 years and it is high time TOLL COLLECTION IS DISCONTINUED as the public dont know where and to whom the huge amounts are going. Increase in toll ges is cascading effect all round.


Lion Drsekar
அக் 27, 2024 12:39

வட்டம், மாவட்டம், பகுதி, மக்கள் பிரநிதி, ஊராட்சி, பேரூராட்சி, மாமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே இந்த வேலையைக் கண்காணிக்காமல் எப்போதும்போல் பதவியை வைத்துக்கொண்டு சொந்த வேலைகளை கவனித்துவருவதால் வரும் பிரச்சனைதான் காரணம், இது சாலைகளுக்கு மட்டும் அல்ல, தெருவிளக்கு, சென்னை போன்ற பெரு நரகங்களுக்கும் பொருந்தும், இப்போதும் மழை நின்றுவிட்டது ஆனால் கூவத்தில் கலக்கவேண்டிய சாக்கடைகள் எல்லா தெருக்களிலும் சுதந்திரமாக ஓடி மழைநீர்க்கால்வாய்களில் கலந்து கொண்டு இருக்கிறது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மாம்பலம் முதல் கோடம்பாக்கம் வரை உள்ள சாலையே இதற்க்கு சாட்சி, இன்றும் மக்கள் காலில் செருப்பு இல்லாதவர்களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்வதைப்பார்க்கலாம், அதைவிட கொடுமை, அடைப்பை நீக்கவேண்டிய துறை , லாரியை வைத்து குழிகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை உறிஞ்சி எடுத்துச்செல்கிறார்கள், இது இன்று கூட காணலாம் , மக்களுக்கு வரிகட்டுவதில் இதே போன்று விலக்கு அளிக்க வேண்டும் , வந்தே மாதரம்


Ramamurthy N
அக் 27, 2024 11:41

முதலில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து பாருங்கள். படு மட்டம் இதில் டோல் வேறு வாங்குகிறார்கள். சென்ற வாரம் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 9 மணி நேரம், திரும்பும்போது 8 மணி நேரமானது. சொந்த காரில் செல்லவே இவ்வளவு நேரமானது, இனி பப்ளிக் போக்குவரத்தில் எவ்வளவு நேரமாகும். சரியான சாலை இருந்தால் டோல் வசூலிப்பதில் தவறில்லை.


பாமரன்
அக் 27, 2024 09:35

பாராட்டுக்கள்... அதேபோல் ஒப்பந்தம் முடிந்தும் அதே கண்டனத்தை கொள்கையாக அடிப்பது பற்றியும் எழுதுங்க...


GMM
அக் 27, 2024 08:49

கிருஷ்ணகிரி எம்.பி. என்று திருத்தி வாசிக்கவும்.


veeramani
அக் 27, 2024 08:37

தேசிய நெடும்சாலைகளில் சுங்கக்கட்டினம் வசூலிப்பது பற்றி தமிழ்நாட்டில் மட்டும்தான் லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எட்டு வழிச்சாலை அமைத்து மேடு பள்ளம் இல்லாத ரோடுகள் அமைத்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்களா????? எவர் வேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்க்கலாம் . தேசிய நெடும்சாலை மட்டும் தமிழக சாலைகள். ஒரு விஞ்ஞானியின் பார்வை. தேசிய நெடும்சாலை உலக தர்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது . வாகனத்தில் அதிருவு இல்லை, கியர் மாற்றவேண்டாம், மழை நீர் தேங்குவதேயில்லை, இரவில் ஒளிரும் படி சாலைகளில் பெயிண்ட் முடிக்கப்பட்டுள்ளது, சாலை இறுதி மட்டும் தெரியும்படி ஒளிரும் பிளாஸ்டிக் தகடு பொருத்தப்பட்டுள்ளது .வாகன ஓட்டுனருக்கு சரியானபடி சாலை உள்ளதால் விபத்து இல்லவேயில்லை. இந்த சாலையை பராமரிக்க மக்கள் கட்ட்டணம் கொடுக்கத்தான்வேண்டும் .


GMM
அக் 27, 2024 07:07

கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம். எல். எ தேசிய சாலையில் டோல் வசூலிக்க கூடாது, எடுக்கவேண்டும் என்று கூறுவது தவறு. மேம்பாலம் பணி சுணக்கம் தான். மாநில நெடுஞசாலையை பயன்படுத்தும் போது டோல் வராது . அதனை தயார் செய்ய கூறலாம். மேலும் ஓசூர் பஸ் நிலையத்தில் மினி பஸ் மட்டும். டவுன் பஸ் இடம் மாற்ற வேண்டும். வெளியூர் பஸ் ரயில் நிலையம் அருகில் மாற்ற வேண்டும். ஓசூர் நகரமைப்பு சரியில்லை. சில நிறுவனங்கள் பெங்களூரை கருத்தில் கொண்டு அமைக்க பட்டவை. சிறுபான்மை குடியிருப்பை அதிகரித்து , ஓட்டு வங்கி உருவாக்கி திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. அரசியல் கோரிக்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை