உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களை திட்டிய கலெக்டர்; தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்களை திட்டிய கலெக்டர்; தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

திண்டுக்கல்: திருத்தணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது, ஆசிரியர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்புக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.சங்க மாநில பொதுச்செயலர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் பிரதாப், தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்களை ஊடகங்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அவர்கள் செய்யும் பணியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். மாநிலம் முழுதும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலும், கடுமையாக பணி செய்து வரும் ஆசிரியர்களிடம் இதுபோல் நடந்து கொள்வது ஆசிரியர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கற்பித்தல் ஆர்வத்தை குறைத்து விடும் அவல நிலையை நோக்கி இது சென்றுவிடும்.பல மாவட்டங்களில், சிறந்த ஆசிரியர்களை கலெக்டர்கள் பாராட்டி வரும் நிலையில், திருவள்ளூர் கலெக்டரின் செயல்பாடு வருத்தத்திற்குரியது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதே சிரமமாக உள்ள இன்றைய சூழலில், மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதே பெரும் சவாலாக இருக்கிறது.பள்ளி சூழல், மாணவர்களின் நிலை பற்றி அறியாமல், அவர்களை பள்ளிக்கு வர வைப்பதற்கான வழிமுறை செய்யாமல், விளம்பர நோக்கில் நடந்து கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அதிகாரத்தை காட்டாமல், மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதற்கான வேலையில் இறங்கலாம். இதுபோன்ற சம்பவங்கள், ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதை கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் கவனிக்க வேண்டும். இதுபோல் வேறு மாவட்டங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை