உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு

மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இதனால், அவரைப்போலவே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய நட்ராஜ் சுறுசுறுப்பாகி உள்ளார். அ.தி.மு.க., சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் கடந்த 2016ல் ஆர்.நட்ராஜ் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆனால், 2021 தேர்தலில், தோல்வி அடைந்தார். தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்த நட்ராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற, அனைவரும் பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும். அ. தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும். அதற்காக உறுதியேற்று களம் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை