உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கியால் சுட்டு கடற்படை வீரர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு கடற்படை வீரர் தற்கொலை

அரக்கோணம்:கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை விமான தளம் மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன், 24, மூன்று ஆண்டுகளாக கடற்படை வீரராக பணியாற்றினார்.நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த அவர், மதிய உணவு இடைவேளையின் போது, அவரது அறைக்கு சென்று வருவதாகக் கூறிச்சென்றவர், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.சக வீரர்கள் சென்று பார்த்தபோது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்னையா அல்லது பணிச்சுமையா என, அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ