உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆய்வு தான் செய்தார் நவாஸ் கனி!

ஆய்வு தான் செய்தார் நவாஸ் கனி!

முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில், ராநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, தன் ஆதரவாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக, நேற்று நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஆனால், நவாஸ் கனி பிரியாணி சாப்பிடவில்லை; ஆய்வு செய்யவே சென்றிருக்கிறார்.அவரது ஆதரவாளர்கள், படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்: நவாஸ்

'பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக, கடந்த 22ம் தேதி நேரில் கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, 'பிரச்னையின்றி கடந்த காலங்களில் எப்படி சுமூகமாக இருந்ததோ, அதேபோல் நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினோம்.இது தொடர்பாக கலெக்டரிடமும் பேசினோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அங்கு தர்கா, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகின்றனர். எனவே தேவையற்ற அசவுகரியத்தை ஏற்படுத்தாமல், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தினோம்.இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் பேசிய போது, 'உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை. ஆடு, கோழி எடுத்துச்செல்வதற்கு இருக்கும் தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார். மேலும், 'சமைத்த அசைவ உணவை எடுத்துச்செல்ல தடை இல்லை' எனப் போலீசார் கூறியதை தொடர்ந்து, சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று, மக்கள் உண்டனர். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, கடந்த காலங்களில் இருந்தது போல், மக்கள் சிரமமின்றி தர்கா சென்றுவர, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கும் நன்றாக தெரியும். நுாற்றாண்டு பழமைமிக்க சிக்கந்தர் தர்கா, மலை மீது அமைந்துள்ளது; அங்கு ஆண்டாண்டு காலமாக, ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.தற்போது ஏதோ புதிதாக, அசைவ உணவு கொண்டு சென்று உண்பதைப் போன்ற தோற்றத்தை, அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல், அங்கு ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டன. இது, நுாறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் நடைமுறை.அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தனிப்பாதை உள்ளது; சிக்கந்தர் தர்காவிற்கு தனிப்பாதை உள்ளது.முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள், எந்த பிரச்னையும் வராத நிலையில், தற்போது இதை வைத்து அரசியல் ஆதாயம் காண வேண்டும் என்ற நோக்கத்தில், இதை அரசிய லாக்கி கொண்டிருக்கின்றனர்.அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையின்படி, தர்கா அமைந்துள்ள 50 சென்ட் நிலம், தமிழக வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த பகுதியில் தான் தர்கா அமைந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை, தொடர்ந்து கடைப்பிடிப்போம்; பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

SUBRAMANIAN P
ஜன 24, 2025 12:31

அவரு பாக்கத்தான் சென்றார்..


Ramesh Sargam
ஜன 24, 2025 12:19

ஆம், பிரியாணி நன்றாக சுவையாக உள்ளதா, அல்லது ஊசிப்போனதா என்று ஆய்வு செய்ய சென்றார். இதைப்போய் பெருஸ்ஸா குற்றம் சொல்கிறீர்கள்.


Sridhar
ஜன 24, 2025 10:43

அப்போ நம்ம ஆளுங்க எல்லாரும் ...கறிய நல்லா சமைச்சு எடுத்துட்டு போங்கப்பா. சமைச்ச உணவுதான் பிரச்சனை இல்லையே? தர்கா முன்னால உக்காந்து சாப்பிட்டா அவுங்க நம்மளோட புனிதத்துவத்த புரிஞ்சிக்குவாங்க. ஆய்வா செய்யறீங்க, ஆய்வு??


angbu ganesh
ஜன 24, 2025 10:13

ஏண்டா ஆய்வு செய்ய போ மசூதிக்கு எங்க கிட்ட வந்துதான் நல்ல பிரியாணியை இல்ல ஊசி போன பிரியனியான்னு ஆய்வு செய்யணும் நீ சேர்ந்த கட்சி பூமிக்கு பாரம்மடா


visu
ஜன 24, 2025 10:12

அவங்க மைனாரிட்டி ஆ இருக்கும்வரை இந்தியா மத சார்பற்ற நாடா இருக்க வேண்டும் அவங்க மஜுரிட்டி ஆகிட்டா மத சார்புள்ள நாடா ஆகிவிடும்


Perumal Pillai
ஜன 24, 2025 09:55

... payal.


Balasubramanyan
ஜன 24, 2025 09:49

Sir, Alla only accept non vegetarian food. is it so. Dharna is not apace for worship. You all say Alla is supreme. We will not pray anybody. You all saying which is correct. Pl. explain.


B MAADHAVAN
ஜன 24, 2025 09:48

பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், எல்லாருக்கும் பொதுவாக உதாரணமாக இருக்க வேண்டிய நிலையை விட்டுவிட்டு, பிரியாணி தின்று கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக போஸ் கொடுத்து மத கலவரத்தை அதிகப் படுத்தும் விதமாக நடந்து கொண்டது சரியல்ல. இன்று ஹிந்து மக்களின் எழுச்சி கண்டவுடன், அடுத்த முறை வரும் தேர்தல் ஞாபகம் வந்து விட்டது போலும். இது போன்று தற்பொழுது பம்மும் வேலை எல்லாம் பிரியாணி தின்பதற்கு முன் வந்திருக்க வேண்டும்.


TCT
ஜன 24, 2025 09:30

To be a Hindu in Tamilnadu is very difficult. Already Tamilnadu Government has swallowed all the assets of different Hindu Temples in all over Tamilnadu and converted it as Tamilnadu government offices and public areas. Now Temple is also being swallowed by International Mafias. Every person other than Hindus in Tamilnadu must understand one thing that until Hindus are existent in Tamilnadu every M & C can live in peace in Tamilnadu. If Hindus are removed by DMK and its alliance Political parties, please note no citizen of Tamilnadu can live in peace with the M & C Hindu DNA itself is peace.


D Natarajan
ஜன 24, 2025 08:58

தமிழக ஹிந்து மக்கள் ஒன்றினைய வேண்டும் . 2026 தேர்தல் முக்கியமானது


SUBRAMANIAN P
ஜன 24, 2025 12:30

இப்படியே ஒவ்வொரு வாட்டியும் கூவிகிட்டு இருக்கணும்.


சமீபத்திய செய்தி