உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன?

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்கள் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக். காதல் திருணம் செய்த அவர்கள், அடிக்கடி ரொமான்ஸ் போட்டோ போட்டு மற்ற ஜோடிகளை வெறுப்பேற்றும் அவர்கள் பிரிந்துவிட்டார்களா?உண்மையில் என்ன நடக்கிறது என்று அவர்கள் தரப்பில் விசாரித்தால், ''இதை யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார்கள். அப்போது அவர்களின் மகன் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சாமி கும்பிட்ட வீடியோ அவ்வளவு வைரல் ஆனது. அப்படிப்பட்ட பாசக்கார தம்பதிகள் பிரிவார்களா?இப்போது தான் இயக்கும் எல்ஐகே படத்தில் விக்னேஷ் சிவனும், தான் நடிக்கும் படங்களில் நயன்தாராவும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் புயல் வீசவில்லை. அவர்கள் இடையே மனப்பிரச்னையும் இல்லை. பணப்பிரச்னையும் இல்லை. அப்படி இருக்க சிலர் வேண்டுமென்ற கிளப்பிவிட்டு குளிர் காய்கிறார்கள்.இதற்கு முக்கியமான காரணம், ஒரு இன்ஸ்டா பதிவு, ''குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும், உங்கள் கணவர் செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல, என்னை விட்டுவிடுங்கள். நான் ஏராளமான பிரச்னைகளை உங்களால் அனுபவித்துவிட்டேன்' என்று நயன்தாரா பதிவிட்டு, அதை உடனே நீக்கிவிட்டார் என்று கூறப்பட்டது. அதை வைத்து இப்படிப்பட்ட வதந்தி கிளம்பியது. உண்மையில் அந்த பதிவை நயன்தாரா பதிவிடவில்லை. போலியாக அப்படி ஒரு பதிவை சிலர் பரப்பினர்.இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் நேற்று இரவு கூட நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் அலுவலகத்தில் ஒன்றாக இருந்தார்கள். சின்ன பார்ட்டி கூட நடந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாக வீட்டுக்கு கிளம்பினார்கள். விரைவில் இந்த செய்திக்கு அவர்களே தங்கள் ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்' '' என்கிறார்கள்.2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இருவரும் இணைந்த ‛நானும் ரவுடிதான்' படம், 2015ம் ஆண்டு வெளியானது. அதிலிருந்து இவர்கள் காதலித்தார்கள். தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 10, 2025 19:45

பிரிந்து சேர்ந்தால் செய்தியும் பல வரும் .வெட்டியாக மக்கள் படித்து நேரத்தை வீணாக்குவார்கள்.


HoneyBee
ஜூலை 09, 2025 21:55

எத்தனை நாட்கள் தான் பழையதை வைத்து வண்டி ஓட்டுவது.‌ பழையன கழிந்து புதிதாக ஒன்றை தேட வேண்டிய அவசியம் இப்போது.‌‌.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:47

பாலிடாயில் பாபுவின் கைவேலையா இருக்கும்?


V K
ஜூலை 09, 2025 19:16

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 18:54

நயனை விட்டு பிரிந்தால், விக்னேஷ் சிவன் பிழைக்க முடியாது. விக்னேசுக்கு வேறு பிஸிநெஸ்ம் கிடையாது. அதனால் நயனோடு வாழ்வது தான், அவருக்கு பாதுகாப்பு. அதனால் காலை சுற்றிய பாம்பாக நயனை விட்டு ஒருபோதும் போகமாட்டார். இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள்.


Shekar
ஜூலை 09, 2025 18:33

அப்பாடா இந்த செய்தியால் ஒரு வழியா இஸ்ரேல் ஈரான், ரஷ்யா உக்ரைன், இந்திய பாக்., பங்களா பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 09, 2025 18:33

பள்ளி கல்லூரிகளில் பட்டி மன்றம் வைக்கலாம். மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான செய்தி.


V RAMASWAMY
ஜூலை 09, 2025 18:24

வேலையற்றவர்கள் செய்யும் விவேகமற்ற செயல்கள். அந்தக்காலத்து திண்ணைப்பேச்சு சமயத்திலிருந்தே இது வாடிக்கையான தேவையற்ற ஆனால் சம்பத்தப்பட்டவர்களுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான செயல்கள். இவற்றையும் சட்டப்படி கண்டித்து தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.


Anand
ஜூலை 09, 2025 18:15

சபாஷ், இதுபோல இன்னும் பல நாட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பெரிதும் உதவும் செய்திகளை போடுங்கள்.....


S.F. Nadar
ஜூலை 09, 2025 18:13

வேற செய்தியே கிடைக்கவில்லையா ? . இதெல்லாம் ஒரு செய்தியா ?