வாசகர்கள் கருத்துகள் ( 8 )
லட்சங்களும் கோடி பணத்தை கொடுத்தால் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்காது சாமி. வீட்டுல இருந்து சாகறத விட இந்த மாதிரி பொது கூட்டத்துல சாகலாம்னுதான் நினைக்கத் தோணும். மின்சார வெளிச்சத்த நம்பி வந்தவங்களுக்கு இருட்டாக்கி, இறந்தவங்களுக்கு பண வெளிச்சத்தை காண்பிப்பதெதற்கு. பொது மக்கள் பாதுகாப்புக்கு மட்டுமே அரசு காவலர்கள். இவங்க அதிகாரத்த எப்படியெல்லாம் அரசியலாக்கி பணமாக்கறாங்கனு அவங்களுக்கே தெரியும்.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பதுபோல இந்த அளவுக்கு சினிமா மோகம் வெறியாக சில இளைஞர்கள் மத்தியில் பரவ என்ன காரணம்? தமிழக இளைஞர்கள் அவ்வளவு அறிவு குன்றியவர்களா? அல்லது அவர்களது வெறித்தனமான ஈடுபாடு அவர்களை ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை செய்ய தூண்டுகோலாக அமையுமா? தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குரியாக இருக்கிறதே? 67 இல் நடந்த சீர்கேடுக்கு பிறகு இது 2.0 ஆ?
இதை அரசியல் ரீதியாக பார்க்காதீர்கள் உயிரிழந்த அப்பாவி ரசிகர்கள் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கட்டும் அது அவரது குடும்பத்துக்கு உதவட்டும்
என்ன வழக்கு பதிந்து என்ன பயன்? உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுவார். மீண்டும் ராஜபோக வாழ்க்கை. போன உயிர் திரும்புமா? இல்லை இவர்களின் அரசியல் வாழ்வு தான் முடிவுக்கு வருமா ??
போலீஸ் பணத்தை எடுத்து கொடுக்கட்டும்
ஒரு இடத்தில் கூட்டம், ஊர்வலம் போலீஸ் கட்டுபடுத்தும் அளவிற்கு மட்டும் அனுமதி. தர வேண்டும். கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசலுக்கு வாய்ப்பு குறைவு. அரசியல் சதி பின் புலம் இருக்கும். ? உயிர் இழப்பு கட்சிக்கு அனுதாபம் கொடுக்கிறது. இதனை பெற வெற்றி கழகம் முயற்சியாக கூட இருக்கும். இந்தி எதிர்ப்பில் உயிர் இழப்பை தான் அண்ணா அரசியலுக்கு அதிகம் பயன் படுத்தியது.? சட்ட ஒழுங்கு போலீஸ் பொறுப்பு. முதலில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த , காயமடைந்த நபருக்கு நிதி உதவி வெற்றி கழகம் தான் கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் முதல் பகுதி மாநில போலீசார் மீது நடவடிக்கை மற்றும் வெற்றி கழக நிதியை முடக்க வேண்டும். மத்திய அரசு, கவர்னர், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அறிக்கை பெற வேண்டும். நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கூட்டம் போட தடை விதிக்க வேண்டும்.
அரசு ஏன் ஒரு கோடி கொடுக்க வேண்டும்? நீதிமன்றம் அரசு மீது குற்றம் சாட்டினால் திமுகவும் திமுக அரசின் ஆலோசனைப்படி நடந்து கொண்ட காவல் உயரதிகாரிகளும் கொடுக்கட்டும்.
எனது கருத்தும் அதுவேதான் . ... அரசின் மீது குற்றம் இல்லையென்றால் , தவெக கட்சி மட்டுமே கொடுக்கவேண்டும் . ....