உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

சென்னை: தமிழகத்தில் பா.ஜ.,வை ஓட்டுச்சாவடி அளவில் பலப்படுத்த, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்று, கட்சியினரை சந்திக்க உள்ளார். இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 30 - 35 தொகுதிகளிலும், 2029 லோக்சபா தேர்தலில் 10 - 15 தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிட முடிவு செய்துள்ளது; அனைத்திலும் வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே, பூத் அளவில் இருந்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மாநிலத் தலைமை ஈடுபட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jix0o4yu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல் கட்டமாக, தமிழகம் முழுதும் எட்டு இடங்களில், மண்டல அளவில் 'பூத் கமிட்டி' மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த மாதம் திருநெல்வேலியில் நடந்த முதல் மாநாட்டில், தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் 21ம் தேதி திண்டுக்கலில் 'பூத் கமிட்டி' மாநாடு நடக்க உள்ளது. இதில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். சில நாட்கள் இடைவெளி விட்டு, கோவை, சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்பின், நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். அவர், கட்சி நிர்வாகிகள், அணி, பிரிவுகளின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதுடன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். இந்நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதுடன், மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதன் பின், கட்சிக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R.Varadarajan
செப் 17, 2025 08:29

அண்ணாமலையும் உடன் பயணம் செய்து பரப்புரை வழங்கவேண்டும்


Vasan
செப் 16, 2025 09:34

Sir, there is a much bigger task in front you. There is a pending case relating to seizure of Rs 3.99 Crores cash money in Tirunelveli bound train at Tambaram railway station, from 3 persons, who were working in restaurant run by you, ahead of 2024 Parlimentary elections, in which you coned from Tirunelveli. What is the present status of that case? If still pending, the proceedings have to be accelerated and final judgment be delivered much before elections, so that the d outcome of that case doesnt turn against BJP.


Palanisamy T
செப் 16, 2025 08:59

பாஜகவை பலப்படுத்துவதில்தான் உங்கள் கவனம். அதனால் ஆட்சியை மட்டும் பிடிப்பதில்தான் உங்களின் கவனமும் அக்கறையும். தமிழகம் பொன்விளையும் பூமியாக நீங்கள் பார்க்கின்றீர்கள். மக்கள் பிரச்சனையை பேசுவதில் உங்கள் கவனமில்லை. இன்றைக்கும் தமிழக மீனவ பிரச்னை மற்றும் கச்சத் தீவு பிரச்னை பற்றி உங்களின் பிரச்சாரத்தில் பாஜக எதுவும் மக்களிடம் பேசவில்லை. தொடவுமில்லை. இந்த கச்சத்தீவு பிரச்னையால் தமிழக மீனவர்கள் இது நாள்வரை இழந்தது ஏராளம். இனிமேல் வர போவது எவ்வளவு என்றும் தெரியவில்லை. இதற்க்கு முதலில் உங்களின் பயணத்தில் ஒருவழிச் சொல்லுங்கள். 1974-க்கு முன் இந்த பிரச்சனையில்லையே. ஏன்?


S.V.Srinivasan
செப் 16, 2025 07:51

நயினார் அவர்களே எடப்ஸுக்கு ரொம்ப சத்தமா ஜால்ரா அடிக்காம, குறைஞ்சது 10 சீட் வாங்க முயற்சி பண்ணுங்க. 2021 மாதிரி 4 சீட்டாவது ஜெயிக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதை பண்ணினீங்கன்னா தமிழகத்தில் ப ஜ க வலிமை பெரும்.


Iniyan
செப் 16, 2025 07:07

அண்ணாமலையை தலைவர் ஆக்குங்கள் கட்சி தானே பலம் பெறும்


Vasan
செப் 16, 2025 07:26

சார், சரியாக சொன்னீர்கள்


Oviya Vijay
செப் 16, 2025 06:59

கட்சியைப் பலப்படுத்துறதுக்காகவா??? சங்கர் சிமெண்ட் வேணுமுங்களா நைனா... ஒரேயடியா சமாதியே கட்டிரலாம்... நச்சுன்னு... பலமா...


Rajasekar Jayaraman
செப் 16, 2025 06:29

டோட்டல் வேஸ்ட்


Palanisamy Sekar
செப் 16, 2025 06:18

நயினார் அவர்களே நீங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று உண்மையில் நினைத்தால் என் மண் என் மக்கள் என்று பட்டிதொட்டியெல்லாம் நடந்தே சென்று மக்களிடையே பாஜகவை அறிமுகம் செய்த திரு அண்ணாமலை அவர்களை மதிப்பு கொடுத்து அழைத்து சென்றால் மட்டுமே மக்களின் எழுச்சியை காணமுடியும். விடுத்து கட்சியில் அத்துணை பெரும் ஒன்றுசேர்ந்து சென்றாலும் பயனில்லை. நன்றாக வளர்ந்துவந்த கட்சியை இப்படி கட்டெறும்பு மாதிரி தேய்த்துப்போக செய்துவிட்டீர்களே


மோகனசுந்தரம்
செப் 16, 2025 06:11

நீர் தலைவன் பதவிக்கு லாயக்கு இல்லாதவன். குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டும் மிட்டாய் நீர்.


pakalavan
செப் 16, 2025 05:35

2 ரூபா மிஸ்டுகால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை