உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்: நம்பிக்கையுடன் காலணி அணிந்த அண்ணாமலை

தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்: நம்பிக்கையுடன் காலணி அணிந்த அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்'' என பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட பா.ஜ., சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=trqaxls7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்றைய தினம், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன். என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த பா.ஜ., சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க தமிழ். வளர்க பாரதம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

vijay
ஏப் 14, 2025 12:21

அண்ணாமலை அவர்கள் இனியாவது ....உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடாமல் கவனமாக அரசியல் செய்ய வேண்டும். ஸ்டாலின் அவர்கள் செந்தி பாலாஜி பற்றி சொல்லததா? வைக்கோ அவர்கள் கலைஞர் அவர்களை பற்றி பேசாததா. திருமாவளவன் திமுகவையும், காங்கிரசையும் சொல்லததா ? இன்னும் எந்தனையோ சொல்லலாம். நாங்கள் அண்ணாமலை அவர்களிடம் எதிர்பார்ப்பது நேர்மையும், திறமையும் உள்ள அரசியல் மட்டுமே .


மூர்க்கன்
ஏப் 14, 2025 09:22

அண்ணாமலை சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருப்பது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல . எதனையும் ஒன்றிற்கு நூறு முறை யோசித்து சொல்வது அதன் பின் இயல் படுவதே அவருக்கு நல்லது. சும்மா எப்போ பார்த்தாலும் கல்லில் எழுதியது அல்ல தண்ணீரில்தான் எழுதியது என்று சமாளிப்பது வாக்கு சுத்தம் இல்லாதவர் என்றே மக்கள் முடிவெடுக்க கொடும். இப்போது அது ஆழமாக பதிந்து விட்டது. ஒரு தலைவனுக்கு அழகு சரியான பாதையை தேர்ந்தெடுத்து அதனை நம்பி பயணிப்பவர்களையும் வழி நடத்துவது இங்கே இவருக்கு பாதை எதுவென்றே தெரியவில்லை அப்புறம் எங்க பயணிக்கிறதாம்.


pmsamy
ஏப் 14, 2025 08:13

அண்ணாமலை வெறும் வார்த்தையில் சொன்னால் பத்தாது


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 01:26

அதான் கட்சியை வளக்குறேன்னுட்டு போட்ட ஆட்டத்துக்கும், அடிச்ச பல ஆயிரம் கோடி வசூலுக்கும், உம்மோட உறவினர்களின் செங்கல்சூளை, மணல் என்று அடித்த கொள்ளைக்கும் உமக்கு திருவோட்டை கொடுத்து போகச் சொல்லிட்டாங்க இல்லே. இன்னமும் என்ன பீலிங்ஸ் வேண்டிகெடக்கு ? சம்பாரிச்ச காசை வெச்சி பாஜடீம்கா ன்னு ஒரு கட்ச்சியை ஆரம்பிச்சு ஆக்டர் விஜய் கூட கூட்டு சேர்ந்து முதல்வர் ஆயிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 01:19

தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன் - செருப்பு மட்டும் ஏன், தமிழ்நாட்டின் முதல்வர் ஈப்பீஸ், நான் தான் துணை முதல்வர் என்று கூட சொல்லிக்கலாம்.


Nesan
ஏப் 13, 2025 20:26

தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும்" அதற்குள் உங்களை அகற்றிவிடடார்கள். தாயை இழந்த தமிழக பி.ஜே.பி. தத்தளிக்கிறது. அண்ணாமலை இளம் ரத்தம், விளைவுகள் அறியாமல் சில தவறுகள் செய்யது இருக்கலாம். அரசியலுக்கு சாணக்கியமும், ராஜதந்திரமும் வேணும். அண்ணாமலை இல்லாதவரை ....இனி தமிழகத்தில் தாமரை மலராது.


அப்பாவி
ஏப் 13, 2025 19:48

சாட்டையப் பிடுங்கி வெக்கணும் நைனா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 14, 2025 02:18

உங்களை விரட்டப் போவதே அந்த சாட்டையினால் தான நைனா....!!!


Rajathi Rajan
ஏப் 13, 2025 18:51

நூல் சாட்டையில் வலிக்கதா மாதிரி அடித்தது போல் சாரி நடித்தது போல நைனார் வாங்கி தந்த புதிய காலனியில் அடித்து கொள்ளவும்..... போடுடா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 14, 2025 02:23

அதிமுக பாஜக கூட்டணி அமந்ததிலிருந்து 200ரு ஊபிஸ்கள் கதறியே சாகுறானுங்க....திமுக வார்ரூம் முழுவதும் அழுகுரலாகவே கேட்கிறது.....!!!


தமிழ்வேள்
ஏப் 13, 2025 18:19

திருட்டு திராவிடத்துக்கு கூடிய விரைவில் தெவசம் நடக்கப் போவது சர்வ நிச்சயம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 01:17

பாடையை பாஜாக்காவுக்கு கட்டிட்டு திவசம் திமுகவுக்கா? என்ன ஓய் ஒளர்றீர் ?


J.Isaac
ஏப் 13, 2025 17:49

அவராக எமோஷனலாக காலணி அணியவில்லை. இப்போது அவரே அணிகிறார். மக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்


முக்கிய வீடியோ