உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பீஹாரை போல தமிழகத்திலும் என்.டி.ஏ., வெற்றி பெறும்: வானதி

 பீஹாரை போல தமிழகத்திலும் என்.டி.ஏ., வெற்றி பெறும்: வானதி

சென்னை: ''பீஹாரை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பீஹார் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் வளர்ச்சி அடைந்த இந்தியாவை எட்ட, பீஹாரும் இணைய வேண்டும் என்பதை, அம்மாநில மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். பெண்கள் அதிக அளவில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து உள்ளனர். சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தி.மு.க., எதிர்க்கிறது. ஓட்டு திருட்டு என ராகுல் பிரசாரம் செய்தார். இதை, பீஹார் மக்கள் ஏற்கவில்லை. தமிழக மக்கள் விழிப்பானவர்கள். பீஹாரைப் போலவே, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இதே போன்ற பெரிய வெற்றியை தமிழகத்திலும் உறுதியாக எதிர்பார்க்கிறோம். பெண்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டால், அவர்களுக்கான அரசை அமைத்து காட்டுவர் என்பதற்கு, பீஹார் உதாரணம். தமிழகத்தில் உள்ள பெண்களும், தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக, பாதுகாப்பான தமிழகம் அமைவதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்வு செய்வர். அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து, தேசிய தலைமை முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை