உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் தடையால் நீட் தேர்வு பாதிப்பு: ரிசல்ட் வெளியிட ஐகோர்ட் தடை

மின் தடையால் நீட் தேர்வு பாதிப்பு: ரிசல்ட் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: மின் தடையால் முழுமையாக, 'நீட்' தேர்வு எழுத முடியாததால் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் ஜூன் 2 வரை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளாக எம்.பி.பி.எஸ்.,- - பி.டி.எஸ்., உள்ளிட்டவற்றில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே4ம் தேதி நடந்தது.தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். சென்னை ஆவடியில் உள்ள பி.எம்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்த அன்று ஏற்பட்ட மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்று மறுதேர்வு நடத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம், பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சாய்ப்ரியா, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் உட்பட 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மனுக்கள் விபரம்

தேர்வு நடந்த அன்று, திடீரென மழை பெய்தது. பின், மின் தடை ஏற்பட்டது. மின் தடையால், குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதினோம். தேர்வு மையத்துக்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டு, கடும் சிரமத்துக்கு உள்ளானோம்.கவன சிதறல்களால் திறமையாக தேர்வு எழுத


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி