உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வித்தரம் உயர்ந்தால் நீட் தேர்வு எளிது

கல்வித்தரம் உயர்ந்தால் நீட் தேர்வு எளிது

மாநில பட்டியலில் இருந்த கல்வி, கடந்த 1976ல், இந்திரா ஆட்சியில்தான் மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதை இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டுவர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. 'நீட்' தேர்வை, அ.தி.மு.க.,வும் வேண்டாம் என்றுதான் சொல்கிறது. ஆனாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. தரம் உயர்த்தினால், மாணவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், தங்களை தகுதிபடுத்திக் கொள்வர். எதிர்காலத்தில் நீட் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவர். மத்திய அரசு கல்விக்கொள்கை வேண்டாம் எனக்கூறும், தி.மு.க., அரசு கடந்த, 4 ஆண்டுகளில், 252 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அனுமதியை வழங்கிவிட்டு, மத்திய அரசை குறை கூறக்கூடாது. தம்பிதுரை கொள்கை பரப்புச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkatesh
மே 11, 2025 20:58

திருடர்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கொள்ளை அடித்தால் மட்டும் போதும்.... சாயம் வெளுத்து விட்டது.... அதனால் தான் பதட்டத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல்..... கூட்டத்தின் தலைவர் துண்டுச் சீட்டு எழுதிக்கொடுக்கும் கூட்டத்திடம் சொல்லி கொஞ்சம் சுருதி ஏத்தி சவடால் பேச்சுக்கள் வாங்கி பேசுகிறார்....


Ram
மே 11, 2025 16:24

பள்ளியில் கற்பிக்கும் தரம் மற்றும் பள்ளியில் தரம் குறைவாக இருப்பதால்தான் மாணவர்களால் போட்டித்தேர்வை எதிர்கொள்ளமுடிவதில்லை , அதனாலதான் கோசிஇங் செல்கிறார்கள் என்பதை சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறார்


அழகு
மே 11, 2025 13:20

உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் அ.இ.அ.தி.மு.க.-வுக்கு உண்டு!


xyzabc
மே 11, 2025 11:33

தரம் கெட்டவர்கள் தரத்தை பற்றி பேச மாட்டார்கள்.


Rajarajan
மே 11, 2025 10:49

இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். உங்களுக்கு புரியுது, தி.மு.க.வுக்கும் அதன் அடிபொடிகளுக்கும் தெரியாத மாதிரி நடிக்கறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை