உதயகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரு
சென்னை: சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய உதயகுமார், நகராட்சி நிர்வாகத் துறை தொடர்பாக பேச முயன்றார். அப்போது, ''முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய மூத்த அமைச்சர் நேரு,'' என, குறிப்பிட்டார். ''இப்பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார். அப்போது குறுக்கிட் ட அமைச்சர் நேரு, ''முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான மூத்த அமைச்சர் என குறிப்பிட்ட உதயகுமாருக்கு நன்றி. ஒருவரிடம் வேலை பார்க்கும்போது நாணயமாக இருக்க வேண்டும். அதை உதயகுமார் உறு திப்படுத்தியுள்ளார்,'' என்றார்.