உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு

தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் இடங்களை நிரப்ப தி.மு.க., அரசு தடை விதித்துள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னரும், காலியாக இருக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான இடங்களை, எம்.பி.சி.,க்களை கொண்டும், எம்.பி.சி.,க்கான இடங்களை, பி.சி., வகுப்பினரைக் கொண்டும் நிரப்ப வேண்டும். பி.சி.,க்களுக்கான இடங்களை, பிற வகுப்பினரைக் கொண்டும் பி.சி., முஸ்லிம்களுக்கான இடங்களை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும் நிரப்ப வேண்டும். இதுதான் விதி.ஆனால், பல அரசு கல்லுாரிகளில் பி.சி., வகுப்பினருக்கான காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை. அதற்காக, காத்திருந்த மாணவர்கள், தனியார் கல்லுாரிகளில் சேர்கின்றனர். தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே, இது போன்று நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, வாய்மொழியாக தடை விதிக்கும் அதிகாரத்தை, கல்லுாரி கல்வி ஆணையருக்கு வழங்கியது யார்? சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ