உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய்க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; மத்திய அரசு புது முடிவு

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; மத்திய அரசு புது முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு நடத்தும். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் புதிதாக யாருக்கேனும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்பது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqzapb0z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதுகாப்பு படையில் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது,இசட், இசட் பிளஸ், ஒய் என வெவ்வேறு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் அரசியலில் இறங்கி உள்ள நடிகர் விஜய்க்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.'Y' பிரிவில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதன்படி அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இந்த பாதுகாப்பானது, தமிழகத்துக்குள் அவர் எங்கு சென்றாலும் தொடர்ச்சியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

K.Ramakrishnan
பிப் 15, 2025 17:40

விஜய் கேட்காமலேயே பாதுகாப்பு தருகிறது மத்திய அரசு. இதே போல எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தர முன் வருவார்களா? எல்லாம் அரசியல் வியூகம் தான்.. இப்படி எல்லாம் செய்தால் விஜய், பா.ஜ. பின்னால் போய் விடுவாரா?


Raju
பிப் 14, 2025 19:34

கோடி கோடி– ஆக சம்பாதிக்கிறவனுக்கு எவன் அப்பன் வூட்டு காசுல பாதுகாப்பு.. மத்திய அரசுக்கு வெட்கமே கெடயாதா...


vadivelu
பிப் 14, 2025 19:59

உங்கப்பன் வீ ட்டு காசில் இல்லை, ஒரு இந்தியனுக்கு ஒரு சிலரால் பாதிப்பு வரும் என்று உளவுத்துறை ஆய்ந்து அறிக்கைகொடுத்தால் இந்திய அரசு அந்த இந்தியருக்கு பாதுகாப்பு கொடுக்கும். சிந்தித்து சில வார்த்தைகளை விடுங்கள். உங்களுக்கே இவ்வளவு வெறுப்பு அவர் மீது இருக்கே.


visu
பிப் 15, 2025 16:34

இதெல்லாம் அதிகம் சம்பாதிப்பவர்களை பார்த்து பொறாமையில் வெளிவரும் குரல்கள் .இப்போ கேட்பவருக்கே ஒரு மிரட்டல் வந்தால் எனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என கேட்பாரா மாட்டாரா ?


Karthik
பிப் 14, 2025 18:02

புதுசா ஒரு தண்டசெலவு..


Tetra
பிப் 14, 2025 14:54

இவனுக்கு எதுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு? யார் இந்த பாதுகாப்புக்கு செலவு செய்வார்கள்? மக்களா? நாட்டுக்கு தேவையில்லாத செலவு


user name
பிப் 14, 2025 14:54

அவங்க ஆளுக்கு அவங்க தானே பாதுகாப்பு குடுக்கணும், பின்ன தமிழக அரசா குடுக்கும்


Velan Iyengaar
பிப் 14, 2025 14:06

கெவுனரை பார்க்கப்போனது இதுக்கு தானா ?? இப்போ தான் குட்டு வெளிப்படுது


Velan Iyengaar
பிப் 14, 2025 14:04

கஷ்டம் தான் .....


Velan Iyengaar
பிப் 14, 2025 14:03

...பார்க்கப்போகும் இந்த பாதுகாப்புப்படை வெளியே நின்னு காவல் காக்குமோ ??


Velan Iyengaar
பிப் 14, 2025 15:06

மூணுசா ...அதுதாங்க அந்த மூணுசாவ


sankaranarayanan
பிப் 14, 2025 13:39

நாங்கள் இனி எங்களது துணை முதல்வருக்கு இசட்டு பிளாசு பாதுகாப்பு எங்கள் கட்சியிலேயே கொடுப்போம் யாருமே கெடக்கமுடியாது அதற்கு எங்களிடம் முழு பணம் உள்ளது


நாஞ்சில் நாடோடி
பிப் 14, 2025 12:36

MGR தனி கட்சி ஆரம்பிக்கும் போது தி மு க குண்டர்கள் மூலம் பல இன்னல்களுக்கு ஆளானார். தற்போது அது போல் எதுவும் நடக்காமல் இருக்கவே பாதுகாப்பு...


புதிய வீடியோ