உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை; எல்.முருகன்

சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை; எல்.முருகன்

சென்னை: சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிப்பதாக சென்னையில் பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. இதன்மூலம், சர்வதேச அளவிலான போட்டிகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியும். தொழில்நுட்பத்தில் நாம் வலுவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே, கல்வி வல்லுநர்கள் மற்றும் துணை வேந்தர்களின் ஆலோசனைகளின் பேரில் இந்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, விரிவான விவாதம் நடத்தி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை