மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்
11-Nov-2024
சென்னை:நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. நவ.10ம் தேதி ஊட்டியில் இருந்து சென்னைக்கு வாடகை காரில் சென்றார். அவர் சிலரிடம் பணம் வாங்கி செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த கணக்கில் வராத பணம் 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.ஈரோடு மாநகராட்சி உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராகவும், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, ஊட்டி நகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷாவுக்கு இரண்டு வாரத்தில் புதிய பணி ஒதுக்கப்பட்டது.
11-Nov-2024