உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி - நாகை இடையே ரூ.12,005 கோடியில் புதிய சாலை

துாத்துக்குடி - நாகை இடையே ரூ.12,005 கோடியில் புதிய சாலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துாத்துக்குடி - நாகப்பட்டினம் துறைமுகங்களை இணைக்கும் வகையில், 12,005 கோடி ரூபாயில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு துறைமுகங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்தை மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, துாத்துக்குடி துறைமுகம் - ராமநாதபுரம் இடையே, 134 கி.மீ.,க்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 4,915 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை, 174 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கு, 7,090 கோடி ரூபாய் தேவைப்படும். மொத்தம் 12,005 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
நவ 12, 2024 10:31

ரோடு போட்ட பிறகு கேடுகெட்ட மாடல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும்.


Bhaskaran
நவ 12, 2024 09:44

இந்தபுதிய நெடுஞ்சாலை தருவைகுளம் குளத்தூர் விளாத்திகுளம் சாயல்குடி வழியாக அமைத்தால் இந்த பிற்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடையும்.ஆனால் இதற்காக அப்பகுதி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்த குரல் கொடுக்கவேண்டும்.அதெல்லாம் ஐயமே


xyzabc
நவ 12, 2024 06:30

இந்த project வெற்றி பெற மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள் . திராவிட அரசிற்கு இது போன்ற project களில் interest கிடையாது. sticker ஓட்ட ரெடி ஆகி விட்டோம். நாகை மாவட்டத்துக்கு உதவும்.


Kasimani Baskaran
நவ 12, 2024 05:42

இப்பொழுதெல்லாம் போராளிகள், சமூக சிந்தனையாளர்கள் ஒருவரும் சாலை அமைப்பதற்கு எதிராக போராட வருவதில்லை.


சமீபத்திய செய்தி