உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்

 கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்

சென்னை: கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை அல்லது அடமானம் ஆகியவற்றுக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஒரு தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்தை மீட்க, ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சித்தபோது, அந்த கல்லுாரி நிர்வாகம் மாற்று நிலத்தை கொடுக்க முன்வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, கேள்வி எழுப்பியது. இதன் அடிப்படையில், தமிழக அரசு கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை, அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இம்மாதம் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

அதன் விபரம்:

கோவில் நிலங்களை விற்பனை செய்வதாக இருந்தால், வழிகாட்டி மதிப்பு அல்லது சந்தை மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ, அதை அடிப்படை மதிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் கோவில் நிலங்களுக்கு ஈடாக வேறு நிலத்தை கொடுக்க முன்வருவோர் தேர்வு செய்யும் நிலம், எந்தவித வில்லங்கம், வழக்கு, ஆக்கிரமிப்பு பிரச்னை இல்லாததாக இருக்க வேண்டும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் பகுதியாக உள்ள நிலத்தை ஏற்க கூடாது. சாலைகள் அமைப்பதற்கான நிலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நிலம், யானை, புலிகள் வழித்தடம், மலைப்பகுதி பாதுகாப்பு குழும பகுதி நிலமாக இருக்க கூடாது இதில் பரிமாற்றத்தில் கொடுக்கப்படும் மாற்று நிலத்தின் மதிப்பு, கோவில் நிலத்தின் மதிப்புக்கு கூடுதலாக இருக்க வேண்டும். மதிப்பு குறைவான நிலம் பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்டால், வேறுபாட்டு தொகையை கோவில் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் கோவில் நிலங்களை குத்தகை அல்லது அடமானம் வைக்கும் நிலையில், அதற்கான காலம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செல்லக்கூடாது இதற்கான நடைமுறைகள் துவங்கும் முன், அது குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு மக்கள் கருத்து தெரிவிக்க, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இதற்கான அறிவிக்கையை, அறநிலையத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், பொது மக்கள் பார்வையில் படும் இடங்களில் ஒட்ட வேண்டும். இவ்வாறு புதிய விதிகளில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
டிச 09, 2025 12:43

ஆலய ஸ்தாவர சொத்து எதனையும் விற்க சட்டத்திலிடமில்லை.


ஆரூர் ரங்
டிச 09, 2025 12:41

தஞ்சை அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பாலிடெக்னிக்கின் ஒரு பகுதி அரசு நிலத்தில் கட்டப்பட்டது கண்டறியப்பட்டது. அதன் நிர்வாகம் அதற்கு மாற்றாக வேறு பெரிய நிலத்தைத் தருவதாக கூறிய போது அதனை ஏற்காமல் அரசு கல்விக்கூடத்தை இடித்து காலி செய்யக் கூறியது. ஆனால் கோயில் இடத்தை மட்டும் ஆக்கிரமிக்க, பிடுங்க, எடுத்துக் கொள்ள விதிகளா? ஹிந்துன்னா மட்டும் இளிச்சவாயன்?.


ramesh
டிச 09, 2025 10:03

கண்டிப்பாக இந்த கல்லூரி அரசியல்வாதிகள் கையில் தான் இருக்கும் ஓன்று ஆழும் கட்சி அல்லது எதிர் கட்சியாக தான் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது


ramesh
டிச 09, 2025 10:01

அந்த கோயில் நிலம் எந்த ஆண்டு கல்லூரிக்கு கொடுக்க பட்டதோ அப்போது இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிலத்தை அடமானமோ அல்லது விற்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது. அதை விற்க யார் உரிமை கொடுக்கிறார்கள் அவர்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது. விற்க முடிவு செய்ய இது அவர்களுக்கு சொந்தமான நிலமா. கல்லூரி கட்டடத்துடன் நிலத்தை கையக படுத்த வேண்டும். குத்தகைக்கு விடும் பொது நிலம் திருப்பி ஒப்படைக்கும் பொது கொடுக்க பட்ட நிலையிலேயே திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட பட்டு இருக்கும் .


karthik
டிச 09, 2025 08:47

மிக தவறான வழிமுறையை... அது எப்படி விலை அதிகமுள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு ஏதோ ஒரு காட்டுக்குள் விலை குறைந்த நிலத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றால் ஆக்கிரமித்த அனைவரும் கோவில் நிலத்தை கொள்ளை அடித்துச்செல்வார்கள். கேவலமான கொள்ளை முயற்சி இது


G Mahalingam
டிச 09, 2025 08:23

இந்து அறம் கெட்ட துறை வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 50 மேல் இருக்கு. இதில் 90 சதவீதம் உயர் நீதிமன்றம் அறநிலை துறையை காரி துப்புகிறது அப்படி இருந்தும் துடைத்து விட்டு கொண்டு உச்ச நீதிமன்றம் செல்கிறது. அங்கு கோவில் உண்டியல் மூத்த வழக்கறிஞர்களுக்கு பணம் கோடியாய் கொடுக்கின்றனர். இதில் திமுக வழக்கறிஞர்கள் ஆமாம் போடுவதற்கு 10 சதவீதம் உண்டியல் பணம் போகிறது.


Anonymous
டிச 09, 2025 08:17

கோவில் நிலத்தை எப்படி விற்கலாம்? அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா?


Almighty
டிச 09, 2025 07:58

கோயில் நிலத்தை எதற்கு கல்லூரிக்கு குத்தகைக்கு விட்டீங்க? எவ்வளவு பொறுக்கி தின்றாலும் வெறி அடங்காத நாய்களுக்கு சமமான ஈனப்பிறவிகள் இவர்கள்.


GMM
டிச 09, 2025 07:46

கந்தசாமி கோவில் நிலத்தில், ஒரு தனியார் கல்லூரி ஆக்கிரமித்து செயல்படுகிறது.? கல்லூரியை அறநிலைய துறை எடுக்கலாம் அல்லது பிற மாநில மற்றும் மத்திய அரசு விருப்பம் பெற்று அல்லது ஏலம் விட்டு ஆன்மிக பயிற்சிக்கு பயன்படுத்தலாம் . கோவில் நிலத்தை மீட்க மாற்று நிலம் பெறுவது தவறு. மதிப்பு மாறும். நிலங்களை பயன் படுத்த வேண்டிய முறை வகுத்து, ஐந்து ஆண்டுகள் குத்தகை அல்லது ஆளும் கட்சி ஆயுள் வரை மட்டும் விடலாம் . கல்லூரி கட்ட அனுமதித்த அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். தண்டிக்க வேண்டும். தீர்வு காணும் வரை கல்லூரி வங்கி வருவாய் கணக்கில் உடன் இந்து அறநிலைய துறை சேர்க்க வேண்டும்.


Sowdarpatti Rayarpadi Ramaswamy
டிச 09, 2025 07:04

இந்த விதிகள் எல்லாம் கோர்ட்க்கு பதில் சொல்ல மட்டுமே. அரசு பின்பற்றுவதற்கு அல்ல. மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் பணத்தை குளத்தூர் காலேஜ் கட்ட அரசு செலவு செய்த கூத்து தெரியாதா? அதை விட இந்த கோவில் பணத்தில் சிதம்பரம் கோவில் கைப்பற்ற வழக்கு, திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு வக்கீல் பீஸ் என செலவழித்து வருவது துரோகம்