உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பி.எப்., திட்டத்தில் புதிய விதிமுறைகள்

 பி.எப்., திட்டத்தில் புதிய விதிமுறைகள்

பழைய 'இ.பி.எப்., 1952' திட்டத்தை மாற்றி, புதிய 'இ.பி.எப்., 2026' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இ.பி.எப்., 2026 திட்ட அம்சங்கள்  மாதந்தோறும் பி.எப்., பங்களிப்பு தொகை 1,800 ரூபாயாக நீடிக்கும் * இந்த 1,800 ரூபாய் என்பது கட்டாய பங்களிப்பு தொகை. இதற்கு மேல் பங்களிக்கும் தொகை, 'விருப்ப பங்களிப்பு' ஆக கருதப்படும் * பணத்தை எடுப்பதற்கான தேவைகள், 'அத்தியாவசிய தேவைகள், வீடமைப்பு, சிறப்பு சூழல்கள்' என்று 3 பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன * மின்னணு விண்ணப்பங்கள், ஆன்லைன் கிளெய்ம், இ - பாஸ்புக் போன்ற டிஜிட்டல் சேவைகளில் கவனம் செலுத்தப்படும் * மொத்த பங்களிப்பில் 25 சதவீதம் குறைந்தபட்ச இருப்பு தொகையாக இருக்கும்; இதை எடுக்க முடியாது * பணத்தை எடுக்க தகுதியுள்ள தொகையில், அதாவது அனுமதிக்கப்படும் 75 சதவீதத்தில் முழுப்பணத்தை எடுத்து கொள்ளலாம்.

பணத்தை எடுப்பதற்கான தேவைகள்

அத்தியாவசிய தேவைகள் மருத்துவம், கல்வி, திருமணம் வீடமைப்பு வீடு கட்டுதல் மற்றும் வாங்குதல், வீடு சார்ந்த மற்ற தேவைகள் சிறப்பு சூழல்கள் இதர அவசரகால தேவைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !