உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேமுதிக 5, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் தலா 1 தொகுதி ஒதுக்கீடு

அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேமுதிக 5, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் தலா 1 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்குகிறது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்ய தீவிரமாகி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்து விட்டது; பா.ஜ., கூட்டணியில் இதுவரை 7 கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=07zaimi6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

தேமுதிக

அதேபோல், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, தேமுதிக.,வுக்கு விருதுநகர், மத்திய சென்னை, கடலுார், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விருதுநகரில் விஜயகாந்த் மகன்!

லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு பெற்றார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்ப மனு வாங்கினார்.16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

சென்னை வடக்கு - ராயபுரம் மனோசென்னை தெற்கு - ஜெயவர்தன்காஞ்சிபுரம் - ராஜசேகர்அரக்கோணம் - ஏ.எஸ்.விஜயன்கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்விழுப்புரம் - பாக்யராஜ்சேலம் - விக்னேஷ்நாமக்கல் - தமிழ்மணிஈரோடு - அசோக்குமார்சிதம்பரம் - சந்திரஹாசன்நாகப்பட்டினம் - சுர்ஜித் சங்கர்கரூர் - தங்கவேல்மதுரை - டாக்டர் சரவணன்தேனி - நாராயணசாமிராமநாதபுரம் - ஜெயபெருமாள்ஆரணி - கஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Rajah
மார் 20, 2024 15:16

அதிமுக எல்லா இடங்களிலும் புதுமுகங்களுக்கு தாராளமாக தொகுதிகளை வழங்கலாம். தேமுதிக வுக்கு 10 தொகுதிகளும் கொடுக்கலாம். வெற்றி வாய்ப்புகள் மட்டும் சாதகமாக இருந்திருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்.


வெகுளி
மார் 20, 2024 15:05

உங்களது பிரதமர் வேட்பாளர் ?


Ramanujadasan
மார் 20, 2024 15:43

பிரதமர் வேட்பாளர் , பிரதமர் எல்லாம் ஒருவர் தான் -


வெகுளி
மார் 20, 2024 14:58

மதச்சார்பின்மையை தூக்கி பிடிக்க எஸ்டிபிஐ கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி இருக்கலாம்... ஹிஹி...


Anbuselvan
மார் 20, 2024 14:28

மதுரை தொகுதி வேட்பாளரை தவிர யார் பெயரையும் அவ்வுளவாக கேள்வி பட்டதே இல்லையே?


Samy Chinnathambi
மார் 20, 2024 11:40

வாழ்த்துக்கள் ஒரே குடும்பமே பரம்பரையா போட்டி போட இது திமுக இல்லை. புது முகங்களுக்கு வாழ்த்துக்கள்........தேமுதிக கட்சியை அதிமுக கூட்டணியும் கேப்டனின் ஆவியும் கரை சேர்க்கும்... .கடைசி நாள் வரை இழுத்தடிக்காமல் கையெழுத்து போட்ட அன்னிக்கு வாழ்த்துக்கள்........


ஆரூர் ரங்
மார் 20, 2024 11:07

அப்படியே தேதிமுகவு சார்பில் நிற்க நான்கு???? வேட்பாளர்களையும் அனுப்பி வையுங்கள். தேர்தல் செலவையும் கொஞ்சம் தாராளமாக கொடுங்கள்.


K.Ramachandran
மார் 20, 2024 10:57

No ADMK bigwigs names in the list. Would have expected some senior leaders to contest. Looks like they have given up even at the time of candidate ion. Why waste money and time, when you know the chances of winning are very low, could be the thinking.


K.Ramachandran
மார் 20, 2024 10:55

நோ big


Velan Iyengaar
மார் 20, 2024 10:52

இந்த ஒரு செய்திக்கு வரும் எல்லா கருத்துக்களையும் ரசித்து சிரித்து மகிழ்கிறேன்


Ramanujadasan
மார் 20, 2024 10:57

தனியாக சிரித்து மகிழ்ந்து கொள்ளுங்கள் . உங்கள் நிலை எல்லோருக்கும் தெரிந்து விடும்


Ramanujadasan
மார் 20, 2024 10:46

அதிமுக என்ற சாம்பலில் இருந்து பிஜேபி என்ற பினிக்ஸ் பறவை உயிர்த்தெழும் , ஏற்கனெவே நடு நிலை தமிழர்களும் , முதன் முறை வாக்கு செலுத்த போவோரும் பிஜேபி க்கு ஆதரவாக உள்ளனர் , இவர்களோடு ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிஜேபி யில் சேர்ந்து விட்ட தொண்டர்களும் உண்டு . பிஜேபி நாள் பட பட , வளர்ந்து கொண்டே இருக்கிறது தமிழகத்தில் . முந்தைய உள்ளாட்சி தேர்தல் இதை ஏற்கனவே நிரூபித்தது . இப்போதைய தேர்தலும் நிரூபிக்கும்


Velan Iyengaar
மார் 20, 2024 11:03

நிதர்ஸனம் வேறு ஒன்றாக அல்லவா இருக்கு


Ramanujadasan
மார் 20, 2024 12:01

உங்களின் தீரா விட கண்ணாடியை கழற்றுங்கள் , உண்மை நிலவரம் காண்பீர்கள் . அந்த தீரா விட கண்ணாடி உடலுக்கும் , உள்ளத்திற்கும் நாட்டுக்கும் , மக்களுக்கும் கேடு


raj
மார் 20, 2024 13:49

அப்படியா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை